தேவனுடைய வார்த்தையாகிய வேதம்
Mon Sep 12, 2016 9:11 pm
தேவனுடைய வார்த்தையாகிய வேதம்
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” - பிலிப்பியர் 4:13
ஹானா என்ற ஜப்பான் நாட்டுப்பெண் 58 வயது நிரம்பியவர். பயங்கர பக்கவாதத் தாக்குதலினால் தன் கைகள், கால்களை அசைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். வாயும் பேச இயலாது. எனினும் கிறிஸ்துவின் அன்பால் நிறைந்திருந்த அவரது எண்ணத்திரையில் சிந்தனைகள் ஓடிக்கொண்டேயிருந்தன. தன் சிந்தனைகளுக்கு எண்ணமும், தன் அனுபவங்களுக்கு வடிவமும் கொடுத்தார். மனதில் தோன்றிய எண்ணங்களை இலக்கியமாக்க எண்ணினார். ஆனால் எப்படி எழுதுவது? கைகள் இயங்காதே! வாயும் பேசமுடியாதே!
ஹானா கர்த்தரை நோக்கி ஜெபித்துக்கொண்டிருந்தார். எந்த சூழ்நிலையானாலும் உதவிசெய்து ஆச்சரியமாய் வழிநடத்தும் வல்லதேவன் ஹானாவிற்கு வாசலைத் திறந்தார். ஹானா எப்படியோ தம் கருத்துக்களை மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் உதவியுடன் அவரருகில் COMPUTER வந்தது. அதன் திரையில் எழுத்துக்கள் வந்துகொண்டிருக்கும். தனக்குத் தேவையான எழுத்து வரும்போது தன் கண்இமைகளை அசைப்பார். அந்த எழுத்து மினி Computerல் பதிவாகிவிடும். இவ்வாறு 280 பக்கங்கள் கொண்ட அருமையான நூலை எழுதினார். நூலின் பெயர் I Want to talk (நான் பேச விரும்புகிறேன்). இது ஹானா தம் கண்களால் எழுதிய கருத்தோவியம்!
இந்த சம்பவத்தை ஒரு புத்தகத்தில் வாசித்தபோது என் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்கள் குளமாயின. திடீரென சில நோய்கள், பெலவீனங்கள் நம்மைத் தாக்கும்போது எதிர்மறை எண்ணங்களாலும், சுயபரிதாபத்திலும் நிறைந்து சோர்ந்து துவண்டு விடுகிறோமல்லவா? எனக்கன்பானவர்களே! மங்கி எரிகிற திரியை அணையாதவரும், நெறிந்த நாணலை முறியாதவருமான நம் தேவன் நம் ஒவ்வொருவருக்கும் பலவித தாலந்துகளையும், திறமைகளையும் தந்துள்ளார். தேவன் தந்த தாலந்துகளை பயன்படுத்தி அவற்றை இரட்டிப்பாக்க வேண்டியது நமது கடமை. நம் பிரச்சனைகள், கவலைகள், வியாதிகளைப் பற்றியே பேசி, யோசித்து, பெரிதாக்கி கொடுக்கப்பட்ட தாலந்தை மண்ணில் புதைக்கவேண்டாம். எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவுக்கு நம் எண்ணங்கள், சிந்தனைகள் முழுவதையும் அர்ப்பணிப்போம்; பெலவீனமான நம்மைக் கூட தேவன் அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்துவார். அல்லேலூயா!
Re: தேவனுடைய வார்த்தையாகிய வேதம்
Mon Sep 12, 2016 9:12 pm
பிறனுடைய கதையை பேசா விட்டால் அநேகரின் நாவு "நம நம" என அரிக்கும்அவன் இதை செய்தான் அதை செய்தான்என்று எதையாவது யாரிடமாவது சொல்லாம அநேகர் படும் அவஷ்த்தை இருக்கே அப்..ப்..பப்..பா இது ஒரு வகை.
மற்றொரு வகை மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் , எவ்வளவு சம்பளம் வாங்கிரான் என்று அடுத்தவர்களின் வாழ்க்கையை அவர்கள் அனுமதியோடு அல்லது அனுமதின்றி ஆராய்வது என்றே தங்கள் வாழ்நாளை கழித்துவிடுவர்.
அவர்களோடு பழகியது தவறா என்று நினைக்கும் வண்ணம் செயல்படுவர்.
இன்னும் சிலர் தானே எந்த வேலையையும்
செய்யவேண்டும் என நினைக்கவேமாட்டனர், பிறறை வைத்து செய்ய நினைப்பவர்கள். இவர்கள் தான் காக்கா பிடிப்பது, காலில் விழுவது என பல தந்திரமான யுக்திகளை பயன்படுத்து நரி போல வாழ்பவர்கள்.
இந்த மூன்று வகையும் சுயமரியாதையைவிற்றவர்கள்,
பொறாமைக்கு எப்பொழுதும்
பிறறை சார்ந்தே செயல்படுவதால் சாமாதாணம் இல்லாமல் நோவு பெறுத்த வாழ்க்கை வாழ்பவர்கள் .வாழ்வில் உன்னத நிலையை அடையாமல் அதற்க்கு ஆசைப்பட்டே அழிபவர்கள்.
(படிக்க மட்டும் அல்ல வாழ்வில் பயன்படுத்த)
அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும் உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும் உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்
[1 தெசலோனிக்கேயர் 4 :12]
ஆகவே வேதம் கூறுவது போல அமைதியுள்ளவர்களாய்,சுயகட்டுபாடுடன் நமது வேலையை நாமே செய்து நம்மை நாமே உயர்ந்த மனபன்பினை உடையவர்களாய் வாழ்ந்து பிறருக்கு முன்மாதிரியாய் வாழ முயற்சிப்போம்.
ஜெபம்
நீதியுள்ள ஆண்டவரே எங்கள் மேல் கிருபையாய் இரும். நாங்கள் செய்த தவறுகளாகிய குற்றம் கண்டுபிடிப்பது,குறை கூறுவது,பிறரின் உழைப்பை அபகரித்ததுக்காய் எங்களை மண்ணியும்.நல் வாழ்வு வாழ பெலனும்,ஏற்ற சூழ்நிலையும் உமது அருளும் தந்து எங்கள் வாழ்வை வளம் பெறச் செய்யும்.
ஆமேன். அல்லேலுயா ஆமேன். அல்லேலுயா ஆமேன். அல்லேலுயா

Mon Sep 12, 2016 9:13 pm
நுகத்தைச் சுமக்கிறது நல்லது
“தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” (புலம்பல் 3:27)
நுகம் மனிதனுடைய வாழ்க்கையில் விரும்பப்படுவதில்லை. அவைகளை அவன் பொதுவாக விரும்புகிறதில்லை.
ஆனால்
வேதம் சொல்லுகிறது,
அது நல்லது. உன்னுடைய ஆரம்ப நாட்களில் உன்மேல் நுகம் வைக்கப்படாதிருந்தால் நீ எப்படி ஆண்டவரிடத்தில் வந்திருப்பாய் என்பதைச் சிந்தித்துப்பார்.
உன் வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளும், ஏமாற்றங்களும், உன் சொந்த பெலத்தால் பரிசுத்தமாக ஜீவிக்கமுடியாது என்கிற உணர்வும் இல்லாமல் நீ இயேசுவண்டை வந்திருக்கமாட்டாய்.
இன்னும் எத்தனையோ விதங்களில், வழிகளில் நுகம் உன்மேல் வைக்கப்பட்டபோது அவைகள் தீமைக்குகேதுவாக அல்ல நன்மைக்கேதுவாக செயல்பட்டிருக்கின்றன என்று உறுதியாய் உன்னால் சொல்லமுடிகிறது அல்லவா!
நுகத்தைக்கண்டு பயப்படாதே அவைகள் உன் கழுத்தை அழுத்தினாலும் உன்னை இணங்கச்செய்யும், தேவனின் கட்டுப்பாட்டிற்குள் உன்னைக் கொண்டு செல்லும்.
ஆண்டவராகிய இயேசு தன்னுடைய நுகத்தைப் பற்றி சொல்லுகிறார்.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத் 11:29)
நமது வாழ்க்கையில் இவ்விதமான நுகங்கள் தேவை.
உனக்கு மனத்தாழ்மை, நீடிய சாந்தம் தேவையாயிருக்கிறது என்றால் உன்மேல் வைக்கும் நுகத்தை நீ ஏற்றுக் கொள்ளும்போது அவைகளை நீ கற்றுக்கொள்வாய்.
நீ கற்றுக்கொள்ளும்படியாக, கோபத்தை உண்டு பண்ணக்கூடிய காரியங்கள், உன்னைத் தாழ்த்தும்படியான காரியங்கள், மற்ற மனிதர்கள் மூலம்,
அல்லது சில சமயங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள், அதிகாரிகள், உறவினர்கள் அல்லது யார் மூலமாகிலும் உனக்கு கொடுக்கப்படலாம்.
ஆனால் அவைகளைத் தாழ்மையாய் ஏற்றுக்கொள். அது உன் ஆத்துமாவுக்கு நல்லது.
நீ அவ்விதம் ஏற்றுக்கொள்வாயா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum