ஆதாமினிடத்தில் வேதம் இருந்ததா?
Wed Dec 16, 2015 12:17 am
முதன் முதலாக படைக்கப்பட்ட ஆதாமினிடத்தில் வேதம் இருந்ததா?
இல்லை என்று சொல்லுகிறீர்களா? அது தவறு,
வேதம் என்றால் அது தேவனின் வெளிப்பாடு,அதாவது தேவனுடைய வார்த்தை. ஆதாமுக்கு தேவனின் வெளிப்பாடு இருந்ததா? நிச்சயம் இருந்தது.
1) தேவன் தான் உலகத்தையும், அதிலுள்ள யாவையும் படைத்தார் என்பதை ஆதாமுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.
2) பூமியை ஆளுகை செய்யவும், நிலத்தைப் பண்படுத்தவும், தேவசந்ததியை உருவாக்கவும் தேவன் தன்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற வெளிப்பாட்டையும் ஆதாம் பெற்றுக்கொண்டான்.
3) இவை எல்லாவற்றிற்கும் மேலாக நன்மை,தீமை அறியத்தக்க கனியை புசிக்க கூடாது என்ற வேதவாக்கையும் பெற்றிருந்தான்…..
இந்த 3 முக்கிய காரியங்களை தேவன் திட்டமும் தெளிவுமாக ஆதாமுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இது தான் ஆதாமுக்கு வேதம்(பைபிள்).
இப்பொழுது இந்த வேத பிரமாணத்துடன் வாழ்ந்த ஆதாம், ஏவாள் குடும்பத்தில் சாத்தான் நுழைகிறான்.
ஆதாமை விழச்செய்ய வேண்டுமானால் சாத்தானுக்கு இருக்கக் கூடிய ஒரே வழி, தேவன் கொடுத்த வெளிப்பாடு தவறு என்றோ அல்லது மாற்றப்பட்டாயிற்று என்றோ சொல்லிதான் வஞ்சிக்க வேண்டும். ஆக அவன் என்ன சொல்லுகிறான் பாருங்கள், நீங்கள் நம்பி வரும் தேவனுடைய வார்த்தை, வெளிப்பாடு தவறு நீங்கள் பழத்தைப் புசிக்கலாம் என்றான்.
ஆனால் ஆதாமும் ஏவாளும் கொஞ்சம் கூட யோசித்துப்பார்க்காமல் புதிதாக வந்தவர் சொல்லுவது தான் சரி என்று நம்பி வஞ்சிக்கப்பட்டனர்….
ஏற்கனவே தேவன் திட்டமும் தெளிவுமாய் ஒரு வெளிப்பாட்டை ஆதாமுக்குக் கொடுத்திருக்க, இப்போது அந்த வெளிப்பாடு தவறு, அல்லது மாற்றப்பட்டாயிற்று என்று யாராவது சொன்னால், ஏன் தேவனுடைய தூதனே சொன்னால் கூட ஆதாம் என்ன செய்திருக்க வேண்டும்?
1) வந்த நபரிடத்தில் தேவன் தான் அவரை அனுப்பினாரா என்கிற ஆதாரத்தைக் கேட்க வேண்டுமே ஒழிய அவர் சொன்ன வார்த்தையை அலசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
2) வருகிற நபர் சொல்லும் வார்த்தையில் இலக்கணம் நன்றாக இருந்தால் அவர் சொல்வது உண்மையாகுமா?
3) மேலும் அவர் சொன்ன வார்த்தையில் எந்த முறன்பாடும் இல்லை என்பதால் அவர் தேவன் அனுப்பின ஆளாகுமா?
4) மேலும் வருகிறவர் உலகத்தைக் குறித்து எந்த மனிதனும் அறியாத சில அறிவியல் உண்மைகளைக் கூறினால் அது தேவன் தான் அனுப்பினார் என்றாகிவிடுமா?
நீங்களே நிதானியுங்கள் இப்போது ஆதாம் பெற்றுக்கொண்ட வேதத்திற்கு மாறாக புதிய வேதத்தை ஒரு தூதன் வந்து கொடுக்கிறான், இந்த நிலைமையில் யார் இருந்தாலும் என்ன செய்ய முடியுமென்றால் வந்த நபரை தேவன் தான் அனுப்பினாரா என்பதற்கான அத்தாட்சியை கேட்க வேண்டுமே ஒழிய, வந்த வெளிப்பாட்டை ஆராய ஆரம்பித்தால் பாவம் செய்வோம்…..
அப்படித்தான் ஆதாமும், ஏவாளும், சாத்தான் புதிதாய் கொண்டுவந்த வெளிப்பாடான, “இந்த பழத்தை புசிக்கலாம், நீங்கள் தேவனைப் போல இருப்பீர்கள்” என்ற வார்த்தையை ஆராய ஆரம்பித்து அதை நம்பி மோசம் போனார்கள்.
இதிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம்,
ஏற்கனவே தேவன் கொடுத்த வெளிப்பாடு மாற்றப்பட்டாயிற்று, அல்லது கறைபட்டுவிட்டது, அழிந்து விட்டது ஆகவே நான் இப்போது புதிய வெளிப்பாட்டை தரப்போகிறேன் என்று யார் வந்தாலும், எந்த தூதன் வந்து சொன்னாலும், நம்பிவிடாமல் தேவன் தான் அனுப்பினாரா என்ற ஆதாரத்தைப் பார்க்கவேண்டும்.
இவ்வாறில்லாமல் கொடுக்கப்படும் புதிய வெளிப்பாட்டை நான் ஆராய்ச்சி செய்து நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லுவது, "நெருப்பை மடியில் கட்டிக்கொள்வதற்குச் சமம்".

Permissions in this forum:
You cannot reply to topics in this forum