வேதம் கூறும் கிறிஸ்தவன் யார்?
Thu Aug 15, 2013 9:45 am
நண்பர்களே,நீங்கள் பல கருத்துகளை கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள், உங்களிடம் ஒன்றை இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
முதலில் யார் கிறிஸ்தவன்:
வேதம் கூறுகிறது, முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.(அப் 11:26),
நீங்கள் உடனே நீங்கள் கேட்கலாம்,
யார் சீஷர்கள்?
1. இயேசு கிறிஸ்துவை விட தன் தகப்பன், தாய், சகோதரன், சகோதரி, தன் ஜீவன் மீது அதிக அன்பு செலுத்தாதவன். (லூக்கா 14:26, மத் 10:37)
2. தனக்கு சாத்தானால் வரும் மாமிசத்தின் கிரியைகள், கண்ணின் இச்சைகள் என்ற சிலுவையை எடுத்துக் கொண்டு இயேசுவின் பின் செல்பவன் ( லூக்கா 14:27,33 )
3. ஆண்டவரின் உபதேசத்தில் நிலைத்திருப்பவன் (யோவான் 8:31)
4. ஒருவரிலொருவர் (அவர் கிறிஸ்தவரோ, இந்துக்களோ, இஸ்லாமியர்களோ,மற்ற அனைத்து மனித குலமும் இதிலே அடங்கும்) அன்பாயிருப்பவன் (யோவான் 13:35)
5. மற்ற ஆத்துமாக்கள்(மனிதர்கள்) மீது ஒரு ஆத்தும பாரத்தோடு(கடமைக்காக அல்ல), அவர்களை இனி வரப்போகிற புழு சாவாத,அக்கினி அவியாத அந்த நரகத்திலிருந்து மீட்பதற்கு பாடுபடுபவன்.(யோவான் 15:
இவர்கள் தான் சீஷர்கள். இவர்களைத் தான் வேதம் கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறது ஆனால், நிறைய நண்பர்கள் தங்களை கிறிஸ்தவ மதத்தான் என காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.அதாவது தன் வாயால் இயேசு, இயேசு என்று சொல்வார்கள்,ஆனால் விரும்புவதோ,செய்வதோ வேதாகமத்திற்கும்,ஆண்டவருக்கும் எதிராக இருக்கும்.
இந்த ஜனங்களைக் குறித்து தான் இயேசு சொன்னார், (Mat 15: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
தன்னைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்பவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்:
கிறிஸ்தவம் என்பது சாதிச் சான்றிதழில் போடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மதமல்ல, கிறிஸ்தவன் என்பதற்கு ’கிறிஸ்து’ ’அவன்’ என்று பொருள். அதாவது கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்துவைப் போன்றவன் ஆவான், நீங்கள் கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் உங்கள் செயல்கள், கிறிஸ்துவைப் போலிருக்கிறதா? கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க இந்த மண்ணுலகத்திற்கு வந்தார் என்று மற்றவர்களிடம் சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா? பாவத்திலிருந்து மனம் திரும்பி, ஞானஸ்நானம் எடுத்து மீண்டும் அதே தவறை செய்தால் அதன் பெயர் இரட்சிப்பா?
இவர்களைப் பார்த்து தான் பவுல் தனது எபிரேய நிருபத்தில் சொல்கிறார்,
Heb 6:4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
Heb 6:5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
Heb 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
Heb 6:7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
Heb 6:8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
உலகத்தின் பக்கம் சார்ந்துகொண்டு நாம் தேவனிடம் கேட்கும் கேள்வி:
இவ்வளவு கவர்ச்சியான உலகத்தின் இச்சைகளால் ஈர்க்கப்படாமல் பரிசுத்தமாய் வாழ்வது எப்படி?
தேவன் பக்கம் சார்ந்துகொண்டு யோசேப்பு உலகத்திடம் கேட்ட கேள்வி:
நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி? (ஆதியாகமம்:39:9)
எத்தனை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சகோதர, சகோதரிகள், பாஸ்டர்கள் யோசேப்பை போல இப்படி உங்களால் சொல்ல முடியும்…
முடிவுரை:
கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்பவன் கிறிஸ்தவனல்ல. கிறிஸ்துவைப் போல் வாழ்பவனே கிறிஸ்தவன்… எல்லாரும் தன்னைக் குறித்து நான் இயேசுவின் பிள்ளை என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால் எல்லாரும் இயேசுவின் பிள்ளை அல்ல, யார் ஒருவன் பிதாவின் சித்தத்தை செய்கிறானோ அவனே இயேசுவின் பிள்ளை, அவனே கிறிஸ்தவன்.
உதாரணமாக, எல்லாருக்கும் ஒபாமாவை தெரிந்திருக்கலாம், எனவே, நீங்கள் ஒபாமாவை எனக்கு தெரியும் என சொல்லலாம், ஆனால், ஒபாமாவுக்கு யாரைத் தெரியுமோ அவர் தான் மதிக்கப்படுவார்
நன்றி: முகநூல் - இயேசு சீக்கிரம் வருகிறார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum