சுரைக்காய் அல்வா
Mon Sep 12, 2016 8:02 am
சுரைக்காய் அல்வா
தேவையானப் பொருள்கள்
துருவிய சுரைக்காய் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 4 கப்
நெய் - 1/2 கப் (அல்லது வனஸ்பதி)
முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய் மேற்கண்ட சாமான்கள் சுமார் 1 கப் வரும்.
செய்முறை
1. சுரைக்காயைத் தோலெடுத்து துருவி வைத்து, சிறிது நேரம் கழித்து, அதிலிருந்து வரும் தண்ணீரை வடித்து விட்டு, (தூரக் கொட்ட வேண்டாம்).
2. ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, வறுத்துக் கொள்ள வேண்டும்.(வாசனை வரும் வரை) முறுமுறுவென்று ஆகக் கூடாது.
3. இப்போது பாலை விட்டு, நன்றாகச் சுண்டும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
4. நன்றாக சுண்டி, தளதளவென்று கொதிக்கும்போது சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி, நன்றாகக் கரைந்தவுடன் மீதி நெய்யைக் கொட்டிக் கிளற வேண்டும்.
5. ஏலக்காய் பொடி கலந்து, முந்திரிப்பருப்பு திராட்சை நெய்யில் வறுத்துப் போட்டு சுரள வந்ததும் கீழே இறக்கி தட்டில் கொட்டிப் பரிமாறலாம்.
6. அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டி, மேலே திராட்சை முந்திரி (நெய்யில் வறுத்து) மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
7. விருந்துக்குப் பாயசத்திற்கு பதில் பரிமாறும் நல்ல ஸ்வீட் இப்போது எதையும் கலர்புல் ஆக செய்யப் பிரியப்படுபவர்கள். சிறிது கேசரிக்கலர் சேர்க்கலாம்.
8. கிளறும் போது எப்போது வேண்டுமானாலும் தேவையான அளவு சேர்க்கலாம்.
9.எதையும் கிராண்டாக செய்யப் பிரியப்படுபவர்கள், பாலுடன் சிறிது சர்க்கரை சேர்க்காதா கோவா(பெரிய கடைகளில் கிடைக்கும்) சேர்க்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum