கோதுமைமா அல்வா
Thu Jun 16, 2016 9:37 am
கோதுமைமா அல்வா
தேவையான பொருட்கள்
கோதுமைமா - 500g
சீனி - 500g
நெய் - 250ml
முந்திரி பருப்பு - 50g
கேசரிப்பவுடர் - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை
கோதுமைமா வை சிறிது நீர் விட்டு கூழ் போலக் கரைத்து கொள்ளவும்.
சீனியை அளவான நீர் விட்டு பாகு காய்ச்சவும்.
அந்த பாகில் மாக்கலவையை ஊற்றி கிளறவும். அதனுடன் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
பின்னர் கேசரிப்பவுடர் , முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி நன்கு இறுகித் திரண்டதும் நெய் பூசிய தட்டில் கொட்டி மட்டப்படுத்தி துண்டுகளாக்கி வெட்டி பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum