உலக மக்களை ஒரு கடவுளின் கீழ் கொண்டு வர இத்தனை யுகயுகமாக காத்திருக்க வேண்டுமா?
Thu Aug 25, 2016 1:19 am
கேள்வி: ஒரு மைக்ரோ நொடியில் இந்த உலகத்தையே மாற்றி அமைக்க வல்லமை படைத்த கடவுள் இந்த உலக மக்களை ஒரு கடவுளின் கீழ் கொண்டு வர இத்தனை யுகயுகமாக காத்திருக்க வேண்டுமா? - சகோ D.j. Chris அவர்களின் நண்பர் ஒருவர்.
பதில்:
முதலில் கடவுளின் வல்லமையைப் புரிந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள். அதேபோல் கடவுள் காத்திருக்கிறார் என்று உணர்ந்திருப்பதற்கும் பாராட்டுகள்.
இறைவன் மனிதனைப் படைத்ததன் நோக்கமே அவனிடம் அன்புகூறவும் தன்னலமற்ற அன்பைப் பெறவும்தான். இறைவன் நம்மேல் அன்பாகவே இருக்கிறார். ஆனால் நாம் தான் இருளை விரும்புகிறவர்களாக, வெளிச்சத்தை அளிக்கும் இறைவனிடம் இருந்து விலகி நிற்கிறோம். இதற்குக் காரணம் பாவத்தை விரும்பும் மனிதனது சுபாவமே. நாம் அவர்மேல் அன்புகூறத்தடை, நம்மில் காணப்படும் பாவத்தின் மேல் இருக்கும் அந்த ஆசையே. இதை அறிந்தருக்கும் அவர் அதற்கான ஒரு திட்டத்தையும் முன்வைக்கிறார்: அதுதான் அவரது மீட்பின் திட்டம்! இந்த மீட்பின் திட்டத்தில், ஆதாமும் ஏவாளும் மட்டுமல்ல, அவர்களின் சந்ததியும், சந்ததியின் சந்ததியாக ஓட்டுமொத்த மனுக்குலமும் இருக்கிறது.
கடவுளின் திட்டம்:
ஆதாம் பாவம் செய்தவுடனேயே இயேசு சிலுவையின் இரத்தம் சிந்தி மீட்பளித்திருக்கலாமே? அப்படி ஏன் செய்யவில்லை என்ற கேள்வி உங்களுக்குள் எப்போதாவது வந்திருக்கிறதா? அவர் ஒருவேளைஅப்படிச் செய்து, அதன் விளைவாக ஆதாமும் ஏவாளும் பாவ மன்னிப்பு பெற்றிருந்தால் இவ்வுலகம் இரண்டே இரண்டு பேருடன் முடிவு பெற்றிருக்கூடும். ஆனால், தேவதிட்டம் அவ்வாறு இருவருக்கானதாக இருக்கவில்லை. அவர் மனிதர்களைப் பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படிச் செய்ய விரும்பினார். தன்னைத் திரளான கூட்டம் மக்கள் மனப்பூர்வமாக விரும்ப வேண்டும் என்ற அன்பின் அடிப்படையில் தொடர்ந்து பூமி இயங்கவும், பூமியில் அதற்கான அனைத்து வசதிகளையும் மனிதனுக்காக வைத்து வைத்தார்.அவரது திட்டம் ஒரு குறுகிய காலத்தில், ஒரு சில மனிதருக்காக மட்டுமானதல்ல. அந்த வாய்ப்பு பல்வேறு கால கட்டங்களில் வாழும் பெருந்திரள்கூட்டம் ஜனங்களுக்கானது.
முதல் வருகை ஏன் தாமதம்?
சரி, அப்படியானால், ஆதாமுக்குக்குப் பின் சில ஆயிரம் ஆண்டு கழித்தே அவர் சிலுவையில் மரித்ததாக வேதம் சொல்கிறதே. அந்தத் தாமதம் ஏன்?
மனிதன் இருதயத்தில் பாவம் எது பரிசுத்தம் எது என்று எழுதப்பட்டிருந்தாலும், பாவத்தை விரும்பும் மனிதனை நல்வழிப்படுத்த வெறும் சட்டங்களும் தண்டனையும், நிவாரணங்களும் மட்டும் போதாது. மனிதனானவன், வெறும் நியாயப் பிரமாணத்தால், அதாவது, சட்டதிட்டங்களால் பாவத்தை எதிர்த்து வாழ்ந்து விடலாகாது; அந்தச் சட்டங்களைக் கொண்டு ஒரு உன்னதமான பாவமே இல்லாத உலகை, மனிதர்கள் தாங்களாகவே ஸ்தாபித்து விடவோ, இயக்கவோ இயலாது என்றும், இந்தச் சூழலில் அவனுக்கு அவனைப் படைத்த இறைவனின் உதவி அவசியம் என்றும் காட்ட விரும்பினார். இந்தக் காலகட்டத்தில், பலகோடி ஜனங்கள் சட்டங்களைக் கொண்டு நல்வழிகாணவும், மீட்பைப் பெறவும் முயன்றுகொண்டிருந்தார்கள். பலரும் இதில் தோற்றார்கள். எனவே, சட்டத்தினால் அல்ல, கடவுளை விசுவாசித்து அவருக்குக் கீழ்படிந்தால் மட்டுமே பாவத்தை மேற்கொள்ள முடியும் என்றும், பாவத்திற்கான ஒரு மீட்கும் பொருள் அவசியம் என்றும், அந்தப் பொருள் மனிதனிடக் கிடையாது என்று, காட்ட விரும்பி கிறிஸ்து வரும்வரை சிலகாலங்களை மனிதனுக்கு தேவன் அனுமதித்தார். அதன்பின் பாவநிவாரண பலியாக தம்மையே அதற்காகத் தந்தார்.
இரண்டாம் வருகை ஏன் தாமதம்?
அப்படியானால், ஒருமுறை கிறிஸ்துவந்த பின், மீண்டும் அவரது இரண்டாம் வருகைக்கு ஏன் தாமதம்? இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் அவர் வரவில்லையே என்ற கேள்வி கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மனதில்கூட உண்டு, ஏனென்றால், தன் சிலுவை மரணம் பெற்றுத் தந்த விடுதலையை இன்னும் பெருங்கூட்டம் மக்களுக்காக திரும்பவும் அவர் வாய்ப்பை அளிக்கிறார். அவர் செய்வது தாமதமல்ல. நமக்கு அருளும் வாய்ப்பு! காலங்கள் அவர் கரத்திலிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. காலத்தின் மேல் அதிகாரம் கொண்ட அவருக்கு இருப்பது பொறுமை! காலங்கள் நம் கையில் இல்லாததால், இது நமக்குத் தான் தாமதம்!
தாமதத்தைக் கேட்க நாம் யார்?
ஒரு வாதத்துக்காக இதை இப்படியாகவும் சொல்லலாம்: தன் காலத்தில் தன் வேலையைச் செய்ய அவருக்கு உரிமை இல்லையா? அவர் தாமதம் செய்கிறார் - காத்திருக்கிறார் என்று நாம் ஏன் நினைக்கவேண்டும்?ஒருவருக்குத் தாமதம் ஒருவருக்குத் துரிதமாகத் தெரிவதில்லையா? கால நேரங்களைப் படைத்தவரிடம் நாம், “ஏன் நீர் தாமதிக்கிறீர்?” என்று கேட்பதே அபத்தமல்லவா? இப்படிக் கேட்க நமக்கென்ன உரிமை இருக்கிறது? இவ்வுலகில் நம் சராசரி காலம் எவ்வளவு என்று தெரியும். ஒவ்வொரு மனிதனுக்கும் அளிக்கப்படும் காலம், சில பத்து வருடங்களே (சங்கீதம் 90:10). எனவே, ஓவ்வொரு மனிதனும் நீண்ட ஆயுளோடு பல ஆயிரம் வருடமாகக் காத்திருக்கிறானென்றால், வருகை தாமதிப்பதாக கருத வாய்ப்புண்டு. நம் வாழ்நாளோ சொற்பம். அப்படியென்றால், வாழ்நாள் குறுகியவன் இதைத் தாமதம் என்று எப்படிச் சொல்ல இயலும்? நாம் அவரது வருகைக்குக் காத்திருக்கும் காலம் - நாம் வாழும் காலம் வரைதானே? மரித்து உலகைவிட்டுக் கடந்த மனிதனுக்குக் காலக்கணக்கேதும் கிடையாது அல்லவா? அதன் பின் அவர் குரலைக் கேட்கும்வரை காலம் ஏதும் பிரேதக் குழியில் இருக்கும் நமக்குத் தரப்படுவதில்லை, எனவே மரித்தபின் மனம் திரும்புவதுமில்லை.(யோவான் 5:28).
அப்படியானால் அவர் எப்போதுவருவார்?
எல்லாக் காலங்களிலும் அவரை ஏற்றுக் கொள்ளாமல் பாவத்தில் உளலும் மனிதர் இருந்துகொண்டே இருகிறார்கள். ஆனால், அவருக்கோ ஒருவர் கூடக் கெட்டுப்போகவேண்டும் என்ற விருப்பம் இல்லை (II பேதுரு 3:9 ). எல்லோரும் தன்னை அன்புடன் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அன்புடன் காத்திருக்கிறார். அனைவருக்குமே வாய்ப்பளிக்கிறார். இது இன்னும் எவ்வளவு காலம் என்று நமக்குத்தெரியாது. ஆனால், நாம் அறிந்து கொள்ளவேண்டியது இதுதான்: வருகை தாமதமாகவில்லை! மாறாக அவர் வருகை வரை மனந்திரும்ப நமக்கு அளிக்கப்படும் காலம், ஒரு உன்னத வாய்ப்பு!
மனுஷகுமாரன் வரும் வேளையை பிதா அறிவார் என்று இயேசு சொன்னார். தாமதம் செய்கிறார் என்று சொல்பவர்கள் நினைப்பதுபோல அல்ல. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். எபிரெயர் 10:37
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். II பேதுரு 3:12,15

Permissions in this forum:
You cannot reply to topics in this forum