பார் இந்த மக்களை!!!
Thu Dec 17, 2015 7:51 am
நான் சம்பாதித்த முதல் வருமானத்தை முழுவதுமாக காணிக்கையாக கொடுத்தேன்!!! ஒரு ஆசிர்வாதமும் இல்லை.,
என்னுடைய ஒவ்வொரு மாத வருமானத்திலும் தசமபாகம் தவறாது செலுத்திக்கொண்டு தான் இருகிறேன்! ஒரு ஆசிர்வாதமும் இல்லை.,
தினமும் ஜெபிக்கிறேன், வேதம் வாசிக்கிறேன், இருந்தும் என்ன பயன்? இன்னமும் சொந்தமாக ஒரு வீடு இல்லை, சொந்தமாக ஒரு வாகனம் இல்லை.,
என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் பெரிய பெரிய வேலையில் இருகிறார்கள், கை நிறைய வருமானம், வெளி தேசங்களில் சுற்றுலா என்று வாழ்கையில் அணைத்து ஆசிர்வாதங்களும் கிடைகின்றன.,
ஆனால்? என்னுடைய வாழ்க்கை இன்னும் நடுத்தரமான வாழ்கையாக இருக்கிறது? இயேசு என்னை ஆசிர்வதிப்பாரா? இல்லையா? என்று இன்னும் இயேசு கிறிஸ்துவை சபித்து கொண்டும், பொலம்பி கொண்டும் இருக்கும் கிறிஸ்தவா??
பார் இந்த மக்களை!!!
இன்று ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை "இயேசுவை நாங்கள் மறுதலிக்கிறோம்" என்று சொன்னால்? அவர்களுக்கு இந்த உலகத்தின் அணைத்து சௌகரியங்களும் உடனே கிடைக்கபெறும், இவர்களோ! தங்கள் உயிரையும், தூக்கி வீச ஆயத்தமாக இருகிறார்கள் இருதயத்தில் இயேசுவை வைராக்கியமாக வைத்து கொண்டு!!! தூக்கு மேடையிலும் கூட இயேசுவே மெய்யான தேவன், இயேசுவே இவர்களை மன்னியும் என்று சிரித்தபடியே உயிரைவிட்ட இவர்கள் இப்பொழுதும், எப்பொழுதும் இயேசுவை உயர்த்திக்கொண்டு தான் இருகிறார்கள் நமக்கு சாட்சியாக!
"அனைத்தையும் இழந்தும் யோபுவை போல அவர்கள்!! அனைத்தும் இருந்தும் யூதாஸ் போல நாம்!!!
-யோசித்து பாருங்கள் நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்படவர்கள் என்று!! -
-அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
எரேமியா 31:3.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum