Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:01 am
இந்திய அரசால் தேடப்படும் கொலை குற்றவாளியான டக்ளஸ் அண்ணனுடன் நம்ம செவ்வாழ சித்தப்பு!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:02 am
அரசியலை ஆழமாக உற்று நோக்குபவரா நீங்கள் ? நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட் டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்தில் ஆண்டொன் றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள். அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள். நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது.
அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும், அதை ஆடுகளுக்கு உணவாக்கி, வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும், இந்தப் பணிக்கு 5000 பேர் தேவையில்லை. கிராமத்தில் இருக் கும் 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையையும் முன் வைக்கிறது.
நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆண்டின் முடிவில் வங்கி கூறியதுபோல நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், அந்த கிராமத் தில் வேலையில்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயம் உருவாகிறது.
ஏங்கெல்ஸ் இங்கே, ‘ஆடுகள் மனிதனை துரத்தி விட்டன’ என்று முடித்திருப்பார். சரியான பொருளாதார அறிஞர்களால் நாடு வழிநடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் இன்றைக்கு பூதாகரமாக வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நாம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகிறது. எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு. இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்துக்குத் தள்ளிவிடும்,
நன்றி ; அரசியல் Vs பாமரன்
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:03 am
தமிழக பாஜகவுக்கு வைத்தியம் பார்க்கவே அமித் ஷா வருகிறார் - தமிழிசை.
--------------------------------------------------------------------
பார்வை சரியா தெரியாது கூட்டணி தலைவர்கள்ன்னு கூட பார்க்காம திட்டுவோம்,
காது கொஞ்சம் கேக்காது இதுவரை மக்கள் பிரச்சனைகளை கேட்டதில்ல,
வாய்ல கொஞ்சம் பிரச்சனை எதையாவது உளறிட்டு 'சொந்தக்கருத்து'ன்னு சொல்லுவோம்,
நியாபக மறதியும் இருக்கு...சொன்னத "இல்லேங்கறேன், சொல்லலேங்க்றேன்"னு சொல்லுவோம்.
மனசாட்சியே இல்லாம நில கையகப்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவு இதயத்துலயும் பிரச்னை,
விவசயிகளின் சுவாசத்தை தடுக்கும் மீதேன் செயல்படுத்தப்படும்ன்னு சொல்லி நுரையீரல் பிரச்னை,
க்ளீன் இந்தியா திட்டத்துக்கு போட்டோ எடுக்க துடைப்பம் புடிச்சு கைளையும் பிரச்னை,
உக்காந்து தினமலர் படிச்சு படிச்சு மூலம்,
மிஸ்டுகால் கொடுக்க சொல்லி அலைஞ்சு அலைஞ்சு காலுலயும் பிரச்னை...
இது எல்லாத்துக்கும் ஒரே மருந்து தாங்க சார்...!!!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:07 am
புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய அண்ணன் பொரி உருண்டையார், ராணுவ உடையில்...!
புதிய தலைமுறை அலுவலகத்தில் குண்டு வீசியதாக மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த பொரி உருண்டை ஜெயம் பாண்டியன்.
--------------------------------------------------------
3 மணிக்கு குண்டு வீசிட்டு, அதுக்குள்ள மதுரைக்கு எப்படி போனான் இந்த பொரி உருண்டை ?
சம்திங் ஃபிஷ்ஷி.....!!@#$#@!!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:08 am
காதிலே ஹெட் செட்டை மாட்டினோமா
கட்டைய நீட்டினோமா....
சைடு கேப்ல மீத்தேன் போராட்டம் தேவையற்றது என பிட்டை போட்டோமா.....கர்கர்........புர்புர்....@3@3@3%$#@!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:09 am
நியூட்ரினோ திட்டம் உருவாகி வரும் அம்பரப்பாறை மலையின் பின்புறம் இருக்கும் “மதிகெட்டான் சோலை” எனும் திருவனந்தபுரம் சமஸ்தானத்தால் 1897ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது.
இந்த காட்டில் 225 விதமான மலர்ச்செடிகளும், இதில் 15 மலர்ச் செடிகள் இங்கே மட்டுமே காணப்படுபவை உலகில் வேறு எங்கும் இல்லை. 30 வகையான உலகில் வேறு எங்கும் இல்லாத தாவர வகைகளும், 11 அரிய வகை தாவரங்களும், மருத்துவ குணம் பொருந்திய 70 தாவரங்களும் நிறைந்த மிகப்பெரிய தாவரச் சுரங்கமாக இருக்கிறது.
மதிக்கெட்டான் காடு மேற்கு மலைத் தொடரிலிருக்கும் மிக முக்கியமான யானைப் பாதையாகும், மேலும் லங்கூர் எனும் குரங்கு வகையும் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
இதன் மிக அருகில் இருக்கும் அம்பாரப்பாறை மலையில் தான் நியூட்ரீனோ திட்டம் என்ற பெயரில் 4000 டன் வெடிகுண்டை வெடிக்க வைத்து மலைக்குள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு துளையிட இருக்கிறார்கள்.
நன்றி: பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:11 am
காதலர் தினத்தன்று நாய்க்கும் , கழுதைக்கும் தாலி கட்டிய பயலுவ எல்லாம் தாலியின் புனிதம் பத்தி பேசுரானுவ.....
கலிகாலம் டா ....
இணையுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துறானாணு அடிக்கடி கவனிக்கவும் சொல்லுங்க ...கட்சிகாரங்ககிட்ட ...!!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:19 am
தமிழனிடம் பணம் பெறும் போது மட்டும் தமிழ் மொழி இனிக்கிறது . தமிழனுக்கு சேவை செய்யும் போது மட்டும் தமிழ் மொழி கசக்கிறது - இந்திய அரசின் கயமை விளம்பரம்.
இன்று வெளியாகியுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறை விளம்பரம் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரம் தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டும் என்று எச்சரிப்பதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் ஆகும். தமிழர்களிடம் பணம் பறிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியில் விளம்பரம் செய்யும் இந்தி அரசு , அதே தமிழர்களுக்கான சேவை வழங்குவதில் மட்டும் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தியை திணிக்கிறது. வங்கிகள், வருமான வரி சேவைகள், தொடர்வண்டி, வானூர்தி சேவை, அஞ்சல் சேவை , ராணுவம், கடவுச்சீட்டு, துறைமுக சேவை, வாழ்நாள் காப்பீடு , சமையல் எரிவாயு, பெட்ரோல் நிறுவனங்கள், நடுவண் அரசின் அலுவலகங்கள் எவற்றிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது இல்லை இந்திய அரசு.
பணம் பெறுவதற்கும், தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கும் தமிழ் மொழியை பயன்படுத்தும் இந்திய அரசு ஏன் தமிழர்களுக்கு வழங்கக் கூடிய சேவைகளை தமிழில் வழங்குவதில்லை. ஏன் நடுவண் அரசு பணிகளில் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை? ஏன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்காமல் எல்லா இடங்களிலும் இந்தியை திணிக்கிறது இந்திய அரசு ? இந்தக் கேள்விகளை எல்லாம் எப்போது நாம் இந்திய அரசின் செவிப்பறைகளில் பலமாக எழுப்புகிறோமோ அப்போது தான் நம் மொழிக்கும் இனத்திற்கும் விடுதலை கிடைக்கும். அது வரை இந்தியர்கள் தமிழர்களை அடிமைகளாகவே வைத்திருப்பார்கள் .
நன்றி: பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:20 am
மாடுகளை பாதுகாக்கவேண்டும் : தமிழிசை..
--------------------------------------------------------------------
முதல்ல இலங்கை கடற்படையால கொல்லப்படுற மீனவன காப்பாத்துங்க மேடம்... frown emoticon
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 10:25 am
அன்றும் இன்றும் எங்களுக்கு ஒரே பேச்சுதான். நாங்க மானஸ்தர்கள். மாற்றி மாற்றி பேசமாட்டோம்.!
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum