சாமை பொங்கல்
Fri Aug 19, 2016 6:49 pm
சாமை பொங்கல்
ஒரு கப் சாமைக்கு, கால் கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
குக்கரில் பால் ஒரு கப் மற்றும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வறுத்த சாமை, பருப்புச் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி அரை டீஸ்பூன் போட்டு வதக்கவும்.
கடைசியாக, முந்திரியை வறுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதற்குத் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.
வயோதிகர்கள், சர்க்கரை நோயாளிகள் நெய், முந்திரியைத் தவிர்த்துவிடுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum