பஞ்சவர்ணப் பொங்கல்
Sun Jul 26, 2015 7:58 am
தேவையானவை:
தினை, வரகு, அரிசிக் குருணை, கோதுமை ரவை, பாசிப் பருப்பு இவற்றைச் சம அளவு கலந்து அதில், ஒரு தம்ளர் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், நெய் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
தானியக் கலவையை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு சிறிது தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம்செய்து எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு இஞ்சி, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, கடைசியில் மிளகுத் தூளை லேசாக வறுக்கவும். வேகவைத்த தானியக் கலவையில் இதைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சித்த மருத்துவர் கண்ணன்:
புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, தாது உப்புகள் சிறு குறு தானியங்களில் நிறைந்து இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் வலுவாகும். உடல் பருமனைக் குறைக்கும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஊட்டச் சத்துக் குறைபாடின்றி, உடல் நன்றாக வலுவடையும்.
படங்கள்: தே.தீட்ஷித்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum