சாமை கல்கண்டு பாத்
Wed Aug 28, 2013 8:32 am
சாமை அரிசி - 1 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
நெய் - இரண்டு டீஸ்பூன்,
கல்கண்டு - முக்கால் கப்,
திராட்சை, முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 4 கப்
எப்படிச் செய்வது?
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். சாமை அரிசியையும் பருப்பையும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும். கல்கண்டை மிக்ஸியில் பொடித்து வைக்கவும். கடாயில் நெய் காயவைத்து திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். சாமை சாதத்துடன் கல்கண்டு பொடியைப் போட்டு நன்கு கிளறவும், முந்திரி, திராட்சை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.4 தண்ணீருக்கு பதில் தண்ணீரும் பாலுமாகச் சேர்த்து வேக விட்டால் இன்னும் சுவை கூடும்.
நன்றி: ஆரோக்கிய வாழ்வு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum