கல்கண்டு சாதம்
Thu Aug 08, 2013 10:04 pm
தேவையான பொருட்கள்:
பச்சரி .................1ஆழாக்கு
சீனி......................2 1 /2 ஆழாக்கு
மைதா ... ...........4 தேக்கரண்டி
முந்திரி...............10
உலர் திராட்சை..10
ஏலம்......................4
கிராம்பு....................4
பச்சை கற்பூரம்......ஒரு சிட்டிகை
ஜாதிக்காய்...........ஒரு சிட்டிகை
நெய்.......................50 மில்லி
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து 3 ஆழாக்கு நீர் விடவும். நீர் கொதித்த பின், அரிசியை நன்கு கழுவி அதில் போடவும். உப்பு வேண்டாம். ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து, 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மைதாவை, கடாயில் போட்டு, எண்ணெய் விடாமல் பச்சை வாசனை போகும்வரை வறுக்கவும். முந்திரி,உலர் திராட்சை, ஏலத்தை துளி நெய் விட்டு வறுக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். பச்சைக் கற்பூரத்தை எடுத்து கையால் பொடி செய்யவும். மிக மெதுவாய் இருக்கும். ஜாதிக்காயை கத்தியால் லேசாக கத்தியால் சுரண்டி கொஞ்சம் எடுக்கவும்.

பொடி செய்த ஏலம், பச்சைக் கற்பூரம் மற்றும் ஜாதிக்காயை ஒரு தட்டில் வைக்கவும். ஆவி போன பின், குக்கரைத் திறந்து பார்த்து, அதனை மீண்டும் அடுப்பில் வைக்கவும். அதில் சீனியைப் போடவும். சீனி போட்டதும் அது கரைந்து இளகி நிற்கும். பின் சாதமும் சீனியும் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது, 5 நிமிடம் கழித்து வறுத்த மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி, கட்டி பிடிக்காமல் கிளறவும். பின் சாதம் நன்கு கெட்டியானதும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலம், பச்சைக் கற்பூரம்,ஜாதிக்காய் மற்றும் நெய் விட்டு நன்கு கிளறவும்.
இந்த கல்கண்டு சாதம் ரொம்பவும் இனிப்பாக, சுவையாக, சூப்பர்ராக, இருக்கும்.
நன்றி: கீற்று
Permissions in this forum:
You cannot reply to topics in this forum