தினை, எள் சாதம்
Fri Aug 19, 2016 6:46 pm
தினை, எள் சாதம்
ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, 50 கிராம் வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum