தினை தஹி பூரி
Fri May 13, 2016 10:41 pm
தினை தஹி பூரி
தேவையானவை:
தினை மாவு - கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கேரட் துருவல் - கால் கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
தயிர் - 100 கிராம்
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிது
தக்காளி - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - அலங்கரிக்க தேவையான அளவு
செய்முறை:
தினை மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்துப் பிசிறி தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக திரட்டி சூடான எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். கேரட் துருவலில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். தயிருடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
பூரிகளின் நடுவே சிறிய துளையிட்டு அதன் உள்ளே பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட் துருவலை சேர்த்து அதன் மேலே தயிரை ஊற்றவும். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா ஓமப்பொடி தூவி பரிமாறவும். வெயிலுக்கு ஏற்ற இதமான மாலை சிற்றுண்டி இது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum