பேசிக்கொண்டிருக்கும் போதே கால் கட்டா? 10 நிமிடங்கள் இலவச டாக் டைம்
Sat Aug 06, 2016 11:15 am
பேசிக்கொண்டிருக்கும் போதே கால் கட்டா? 10 நிமிடங்கள் இலவச டாக் டைம் வழங்குகிறது இந்த நிறுவனம்
கால் டிராப் ஏற்பட்டால் அதற்கு அந்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கேட்க முடியாது என சம்மீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்தியாவின் முக்கிய தகவல் தொடர்பு நிறுவனமான வோடபோன், பேசிக்கொண்டிருக்கும் போதே கால் கட் ஆனால், அதை ஈடுக்கட்டும் வகையில் 10 நிமிடங்கள் இலவச டாக் டைம் வழங்கப்போவதாக இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவு இயக்குனர் சந்தீப் கூறுகையில் “அனைத்து தொலைபேசி அழைப்புகளும் முக்கியமானவை. ஆனால் சில நேரங்களில் அழைப்புகள் துண்டிக்கப்பட்டு விடுகிறது. துண்டிக்கப்பட்ட உரையாடல்களை நீட்டிக்கும் வகையில் 10 நிமிடங்கள் இலவச டாக் டைம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த இலவச டாக் டைமை பெறுவதற்கு ''BETTER'' என டைப் செய்து 199 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
அடுத்த 30 நிமிடங்களில் இலவச டாக் டைம் கிடைத்துவிடும். பிரீபெய்டு சந்தாதாரர்கள் இந்த இலவச டாக் டைமை, அடுத்த நாள் நள்ளிரவு வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். மாத சந்தாதாரர்கள், அடுத்த மாதம் கட்டணம் செலுத்தும் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
--மாலைமலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum