கட்டா மீட்டா சப்போட்டா
Mon Jul 20, 2015 8:50 pm
தேவையானவை: செங்காய் பதத்தில் இருக்கும் சப்போட்டா துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சப்போட்டாவை தோல் சீவி, வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து, துண்டுகளாக்கி (ஒரு கப் அளவு போதும்), மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள், கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்து, ஊற வைத்துள்ள சப்போட்டா விழுதை போட்டு, மிதமான தீயில் வதக்கவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து சர்க்கரையைப் போட்டு நன்கு கரையும் வரை கரண்டியால் அடிபிடிக்காமல் கிளறவும். புளி, சர்க்கரை கலந்து நல்ல மணம் வரும்போது... வறுத்து பொடித்த வெந்தயம், காய்ந்த மிள காய், பெருங்காயம் சேர்த்து இறக்கி, ஆற விட்டு, பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.
செய்முறை: பாதாம்பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோலுரிக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை தனியாகவும்... உளுந்து, பச்சரிசியை தனியாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றுசேர்த்து நைஸாக அரைக்கவும்.
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
கட்டா - மீட்டா சப்போட்டா: சாட் மசாலா சிறிதளவு சேர்த்தால், சுவையும் மணமும் மேலும் சூப்பராக இருக்கும்.
டிரைஃப்ரூட் பால் பணியாரம்: சிறிதளவு மில்க் மெய்ட் சேர்த்து தயாரித்தால்... ருசி அதிகரிக்கும்.
செய்முறை: சப்போட்டாவை தோல் சீவி, வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து, துண்டுகளாக்கி (ஒரு கப் அளவு போதும்), மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள், கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்து, ஊற வைத்துள்ள சப்போட்டா விழுதை போட்டு, மிதமான தீயில் வதக்கவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து சர்க்கரையைப் போட்டு நன்கு கரையும் வரை கரண்டியால் அடிபிடிக்காமல் கிளறவும். புளி, சர்க்கரை கலந்து நல்ல மணம் வரும்போது... வறுத்து பொடித்த வெந்தயம், காய்ந்த மிள காய், பெருங்காயம் சேர்த்து இறக்கி, ஆற விட்டு, பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.
மிகவும் மணமுள்ள, சுவையான இந்த கட்டா - மீட்டா சப்போட்டா... ரொட்டி, நான், சப்பாத்தி, பூரி, தயிர்சாதம் வெஜி டபிள் புலாவ், தேங்காய் சாதம் போன்ற வற்றுக்கு தொட்டுக்கொள்ள வெகு ஜோராக இருக்கும்.
- 'மாங்குடி’ மும்தாஜ், நிக்கோபார்
டிரைஃப்ரூட் பால் பணியாரம்
தேவையானவை: முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா, உளுந்து, பச்சரிசி தலா 100 கிராம், திக்கான பால் - முக்கால் லிட்டர், சர்க்கரை - 750 கிராம், ஏலக்காய் - 5, எண்ணெய் - 400 கிராம், குங்குமப்பூ - 10 கிராம்.செய்முறை: பாதாம்பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோலுரிக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை தனியாகவும்... உளுந்து, பச்சரிசியை தனியாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றுசேர்த்து நைஸாக அரைக்கவும்.
பாலைக் காய்ச்சி, கொதி வந்தவுடன் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். நன்கு கொதித்தவுடன்... ஏலக்காயை தோல் நீக்கி பவுடராக்கி, பாலில் சேர்த்துக் கலக்கி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அரைத்து வைத்திருக்கும் விழுதை சிறுசிறு உருண்டைகளாகி பொரித்தெடுக்கவும். இந்த உருண்டைகளை பாலில் போட்டு... இரண்டு மணி நேரம் ஊறியவுடன் மேலே குங்குமப்பூ தூவி பரிமாறவும்.
- வெ.தாரகை, கும்பகோணம்
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
கட்டா - மீட்டா சப்போட்டா: சாட் மசாலா சிறிதளவு சேர்த்தால், சுவையும் மணமும் மேலும் சூப்பராக இருக்கும்.
டிரைஃப்ரூட் பால் பணியாரம்: சிறிதளவு மில்க் மெய்ட் சேர்த்து தயாரித்தால்... ருசி அதிகரிக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum