எதிர்மறை எண்ணம் உடையவர்களிடமிருந்து தப்பிக்கும் 10 வழிகள்!
Fri Jul 29, 2016 10:25 pm
எதிர்மறை எண்ணம் உடையவர்களிடமிருந்து தப்பிக்கும் 10 வழிகள்!
எல்லோராலும் வெற்றியாளராக முடியவில்லையே ஏன்?
அதற்கு எதிர்மறை எண்ணம் உடையவர்களை அருகில்வைத்துக்கொண்டிருப்பது ஒரு காரணம்.
இவர்கள் நேரத்தை பாரபட்சமில்லாமல் செலவழிப்பார்கள்.எரிச்சலூட்டுவார்கள். முயற்சிகளை உடைப்பார்கள். குறை சொல்வார்கள். வெற்றிப் பாதையில் முட்டுக்கட்டைகளைப் போடுவார்கள்.
அவர்களை தவிர்க்கும் 10 வழிகளை பார்ப்போம்.
1. அழகாக நழுவக் கற்றுக் கொள்ள வேண்டும்..!
ஒருவர் எதிர்மறை எண்ணமுடையவர் என்று உங்களுக்குத்தெரிந்துவிட்டால் உடனே அவரிடமிருந்து நழுவி விடுங்கள்.
உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு அடுத்த முறைபேசுவதையே நிறுத்திவிடுங்கள்.
2. எல்லாவற்றும் ஓர் எல்லை இருக்கிறது..!
இவர்களின் நிலை பரிதாபமானது. அவர்களின் கதையும் தோல்வியும்அவர்கள் மீது இரக்கத்தை வரவழைக்கும். இரக்கப்பட வேண்டியதுதான்,
ஆனால் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. ரொம்ப இரக்கப்பட்டால்அவர்களோடு சேர்ந்து நீங்களும் இறக்கம் காண வேண்டியதுதான்.
3. தனிமை உஷார்..!:
எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்களோடு தனிமையில் அதிக நேரம்செலவிடுவதைத் தவிருங்கள் வேண்டும்.
அவர்களோடு இருக்கும் நேரங்களில் ஏதேனும் எதிர்மறையாகப் பேசினால்பேச்சை மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்.
4. தப்பி தவறி கூட வாதம் வேண்டாம்..!
எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்கள் 'நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்' என்று விடாப்பிடியாக பேசுபவர்கள் என்பதால் இவர்களிடம் வாயைகொடுக்காமல் இருப்பது நல்லது.
வாதம் பண்ண ஆரம்பித்துவிட்டால் நீங்கள் அவ்வளவுதான்.
5. ஒரே ஒரு முறை அறிவுரை..!
இவர்களிடம் நேர்மறையாகச் சிந்திக்கவும் செயல்படவும் முயற்சிக்குமாறுஅறிவுரை சொல்லுங்கள்.
ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். இரண்டாவது முறையும்சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், அதோடு அறிவுரை கூறுவதையேநிறுத்திவிடுங்கள்.
இல்லாவிட்டால் உங்களுடைய பொழுது கழிவதைத் தவிர வேறு எதுவும்நடக்காது.
6. புன்னகையால் வெல்லுங்கள்..!
எதிர்மறை எண்ணமுடையவர்கள் எப்போதும் மற்றவர்கள் அவர்களோடுவாதம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் அவர்களேபேச்சை முதலில் ஆரம்பிப்பார்கள்.
அந்த நேரங்களில் எதுவும் பேசாமல் புன்னகை மட்டும் செய்யுங்கள். சிலமுறை நீங்கள் அப்படி இருந்தாலே அவர்கள் வாய் தன்னால் மூடிவிடும்.
7. உறுதியாக இருங்கள்..!
நம்மில் சிலர் மிகுந்த இரக்க குணம் உடையவர்களாக இருப்பின்எதிர்மறை எண்ணம் உடையவர்களைத் தவிர்ப்பது என்பது முடியாதகாரியம்.
அந்தச் சமயங்களில் நாம் மனத்தை உறுதியாக வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் என்ன பேசினாலும் செய்தாலும் அவர்கள் பக்கம்,அதாவது எதிர்மறை எண்ணங்கள் பக்கம் சாயாமல்பார்த்துக்கொள்ளுங்கள்.
8. காதில் வாங்க கூடாது..!
எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களுக்கு மற்றவர்களை விமர்சனம்செய்வது என்றால் அவ்வளவு இனிக்கும்.
ஆனால் அவர்கள் செய்யும் விமர்சனத்தைக் காதில் வாங்க கூடாது.
அந்த நேரங்களில் காது கேட்கவில்லை என்பது போல இருந்துவிடுவதுநல்லது.
9. எல்லோரையும் சந்தேகப்படக் கூடாது:
இவை அனைத்தையும் படித்த பிறகு அருகிலிருப்பவர்எதிர்மறையானவரா என்று சோதனை செய்து பார்க்கக் கூடாது.
அப்படி நீங்கள் ஒருவரிடமுள்ள எதிர்மறை குணங்களைத் தேடவோ,அல்லது எதிர்மறை எண்ணங்கள் உடையவரது செயல்களைக்கண்காணிக்கவோ நினைத்தால் முதலில் நீங்கள் எதிர்மறை எண்ணம் உடையவர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
10. எதிர்மறையானவரை அவர்கள் போக்கில் விட்டுவிட்டுங்கள்..!
எதிர்மறையானவரா அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு நீங்கள்உங்கள் வெற்றியை நோக்கி மட்டுமே பயணத்தைத் தொடருங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum