கிறிஸ்துவில் வளர 7 வழிகள்
Thu Feb 04, 2016 4:31 pm
பெற்றெடுக்கும் பிள்ளையிலிருந்து, புதிதாய் நடும் ரோஜா செடி வரை அனைத்திலும் வளர்ச்சியை எதிர்பார்ப்பது மனிதனுடைய நியாயமான ஆசை! அதுபோல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு புது விசுவாசியும் கிறிஸ்தவ வாழ்வில் வளர வேண்டுமென்பது தேவனுடைய விருப்பம். இப்படி கிறிஸ்துவில் வளருவதற்கான வழிகளை ஒரு பக்தன் பின்வருமாறு விளக்குகிறார்.
1. விட வேண்டிய கெட்டவழிகளை அதிக பிரயாசத்தோடும், தேவ ஒத்தாசையோடும் விட்டுவிட வேண்டும். இதற்காக உபவாசமிருக்கவும் தயங்கக்கூடாது.
2.உங்களுடைய வழிகள் கர்த்தருடைய வழிகள்தானா என்பதை ஆராய்ந்து பாருங்கள். கர்த்தருடைய வழியில் உத்தமமாய் நடக்க உள்ளத்தின் ஆழத்தில் திட்டமான தீர்மானமெடுங்கள்.
3. ஜெபக்கூட்டங்கள் மற்றும் ஆராதனைகளில் அதிகமாய் கலந்துகொள்ள பிரயாசமெடுங்கள்.
4. அந்தரங்கத்தில் ஜெபிக்கும் தனி ஜெப வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதிகாலை வேளையே தியானத்திற்கும் ஜெபத்திற்கும் ஏற்றது.
5. தேவ சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுங்கள். நானல்ல கிறிஸ்துவாகிய நீரே என்னில் பெருக வேண்டுமென்று மன்றாடுங்கள்.
6. கிறிஸ்துவின் சாயல் உங்களில் வளரட்டும். கிறிஸ்துவின் சுபாவங்கள் உங்களில் பெருகட்டும். அவரது குணாதிசயங்கள் உங்களது வாழ்வில் காணப்படட்டும்.
7. உங்களுக்கென்று ஒரு ஊழியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். ஜெப ஊழியமோ, கைப்பிரதி கொடுப்பதோ, வியாதியஸ்தரை சந்திப்பதோ, சிறைச்சாலை ஊழியமோ எதுவானாலும் உற்சாகமாய் கர்த்தருக்கென்று செய்யுங்கள்.
பிரியமானவர்களே! மேற்கண்ட எளிய ஆனால் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த காரியங்களை பின்பற்றுவோமானால் நாம் கிறிஸ்துவுக்குள் வளர்வது உறுதி. வளர்வதோடு மாத்திரமல்ல கனி கொடுக்கவும் முடியும். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் வருடக்கணக்கில் பெயர் கிறிஸ்தவராய் வாழ்ந்து விட்டீர்களோ? இனியும் தாமதிக்க வேண்டாம். இன்றே மனம் திரும்புங்கள். வளர வேண்டிய வழியை அறிந்துகொண்ட பின்பும் மனம் கடினமாயிருக்க வேண்டாம்.
http://www.christsquare.com/

Re: கிறிஸ்துவில் வளர 7 வழிகள்
Thu Feb 04, 2016 4:34 pm
கொஞ்சத்திலே உண்மை
ரஷ்ய அரசன் ஒருவன் ஆப்பிள் தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்திலிருந்த மரத்திலிருந்து ஆப்பிள் அருகில் ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து மிதந்து சென்றது. சிறிது தூரம் சென்ற ஆப்பிள் குளித்து கொண்டிருந்த ஒரு வாலிபனின் கண்களில் பட்டது. மிகவும் சிரமப் பட்டு நீந்திப்போய் அதை கையில் எடுத்தவன் யோசிக்க ஆரம்பித்தான். இந்த ஆப்பிள் எப்படி இந்த நதியில் மிதந்து வர முடியும்? அப்போது தான் ராஜாவின் ஆப்பிள் தோட்டம் நதிக்கரை ஓரத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது.
ராஜாவின் அனுமதி இல்லாமல் அவருடைய தோட்டத்து ஆப்பிளை நான் எப்படி உண்ண முடியும்? நதியில் கண்டெடுத்த ஆப்பிளை கையில் எடுத்துக் கொண்டு ராஜாவின் அரண்மனை நோக்கி சென்றான். விஷயத்தை பிரதானிகளிடம் கூறினான். பிரதானிகள் ராஜாவிடம் சொன்னார்கள். அரண்மனை தோட்டத்து ஆப்பிளை எடுத்தது தவறு என்று வாலிபன் மீது குற்றம் சாட்டபட்டு ஒரு பார்வையற்ற பெண்னை திருமணம் செய்ய வேன்டும் என்று ராஜா, கட்டளையிட்டார். திருமண நாளும் வந்தது அதுவரை அரண்மனைச் சிறையில் கைதியாக வைக்கப்பட்டிருந்த வாலிபன் விடுதலை செய்யப் பட்டு கை உடையிலிருந்து மணமகன் உடைக்கு மாறினான்.
அரண்மனை எங்கும் திருமண விழாக் கோலமாக அலங்கரிக்கப்பட்டது. மணமகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். முகம் சல்லாத் துணியினால் மூடப்பட்டுள்ளது. தனக்கு தண்டனையாக, தான் மணக்க இருக்கும் குருட்டு பெண்ணின் முகத்தை பார்க்க வாலிபன் ஆவல் கொண்டான். மணமகளின் கழுத்தில் மலர்மாலையை போடுவதற்கு முன்னால், மெல்ல அவள் முகத்தை மூடியிருந்த சல்லாத் துணியை அகற்றினான். முகத்தைப் பார்த்தவன் பேரதிர்ச்சி அடைந்தான்.
மணமகளாக ராஜாவின் அருமை மகள் அழகு ஓவியமாக நின்றாள். வாலிபனின் உண்மை அரசனை கவர்ந்த படியால் மகளையேத் திருமணம் செய்து வைத்தார். நம் வாழ்க்கையிலும் உண்மையுள்ளவர்களாக இருப்போமானால் ஜீவ கிரீடத்தை பெறுவோம். அநேகத்தின் மேல் அதிகாரிகளாகவும் மாறுவோம்.
உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன். மத்தேயு 25:21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum