ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்:-
Sat Aug 08, 2015 4:59 pm
நல்ல பழக்க வழக்கங்களும், உணவுக் கட்டுப்பாடும் உடலை நலமாக வைத்துக் கொள்ளும் வழிகளாகும். நோய் வந்த பிறகு சிகிச்சை எடுத்து நோயை குணப்படுத்திக் கொள்வதை விட, நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடிப்பது நல்லது.
அதற்கான சில யோசனைகள்..
1. கையை கழுவுதுல் : பொதுவாக கையை கைழுவும் பழக்கம் என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அடிப்படை விஷயமாகும். வெளியில் சென்று வந்தாலும், சாப்பிடும் முன்பும், கழிவறையை பயன்படுத்தியப் பிறகும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
2. சத்துணவு : சத்துள்ள உணவை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடலாம்.
3. உடற்பயிற்சி : நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான முக்கிய அம்சங்களாகும். எந்த உடல் உழைப்பும் இல்லாமல், வெறும் சாப்பிடுவது, உறங்குவது என்று இருந்தால் உடல் மாமிச மலையாகிவிடும்.
4. உறக்கம் : உடலுக்குத் தேவையான சக்தியை எவ்வாறு உணவின் மூலம் பெறுகிறோமோ அதுபோல ஓய்வை உறக்கத்தின் மூலம் பெறுகிறோம். எனவே அன்றாடம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் எழுந்து அன்றையப் பணிகளைத் துவக்குவது நல்லது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
5. உண்ணாமல் இருப்பது : தினமும் 3 அல்லது 4 வேளை சாப்பிட்டு வயிறை எப்போதும் இயக்கத்திலேயே வைத்திராமல், வாரத்தில் அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு முறையாவது ஒரு வேளை உணவை தவிர்த்துவிடுவது வயிற்றுக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum