எண்ணம் போலவே இல்லம் அமைய...
Thu Jul 02, 2015 2:47 am
------------------------------------------------------------------
பொறியியல் அனுபவம் ஏதுமின்றி, வீட்டின் வடிவமைப்பு, இன்டிரியர் செய்ய, Autodesk நிறுவனத்தின் இலவச மென்பொருள்
-------------------------------------------------------------------
தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டைக் கட்டி முடிப்பது என்பது மிகப்பெரிய ஒரு போராட்டம்தான். தாம் நினைத்தபடி மட்டுமல்லாமல், வீட்டின் சிண்டு, வாண்டுகள் வரையில் அனைவருக்கும் பிடித்தார்போல் ஒரு வீட்டைக் கட்டிய குடும்பத் தலைவரை அரிது அரிது காண்பது அரிது. என்ட்ரன்ஸ் சரியில்லை, பெட்ரூம் க்ஷேப் சரியில்லை, ஹாலுக்கான பெயிண்டிங்கும் சரி, ஃபர்னிச்சரும் சரி தப்பான கலர் செலக்க்ஷன் என்றெல்லாம் கமெண்டுகள் எக்கச்சக்கமாக விழுந்து கொண்டிருக்கும். லட்சக்கணக்கில் பணம் போட்டு வீட்டைக் கட்டி பணி நிறைவுடன் நாம் பெருமூச்சு விடாதபடி, இந்தக் கமெண்டுகள் நமது காதை குடைந்துகொண்டிருக்கும். இனி, அது போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்குத்தான் வந்திருக்கிறது ஹோம் ஸ்டைலர் இணையதளத்தின் டிசைனர் மென்பொருள்.
கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்களது ரசனைக்கேற்றபடியான கட்டிட வடிவமைப்பை ஒரு ஆர்க்கிடெக்ட் மூலமாக உருவாக்கி, ஒரு தேர்ந்த பொறியாளரின் ஆலோசனையின்படி கட்டிடப்பணியைத் துவங்குகிறார்கள்.
AutoCAD இன் உதவி கொண்டு 3டி மாடலையும் உருவாக்கி பார்த்து திருப்தியடைகிறார்கள். ஆனால் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் பிரச்சனையினால், ஆர்க்கிடெக்ட், பொறியாளர் இவர்களைத் தவிர்த்து, ஒரு காண்ட்ராக்டரை கொண்டு, கட்ட முற்படுகிறார்கள், இது போன்ற ஒரு சமயத்தில், தங்களது வீடு எப்படி அமையவேண்டும்? என்பதும், உள் வடிவமைப்பு எப்படி இருக்கவேண்டும்? என்பதும் அந்த காண்ட்ராக்டருக்கு எப்படி சரியாக புரிய வைப்பது?..
பெரிய பொறியியல் அனுபவம் ஏதுமின்றி, AutoCAD பயிற்சி தேவையின்றி, தங்களுக்கான வீட்டின் வடிவமைப்பு, Interior ஆகியவற்றை எளிதாக செய்ய, AutoDesk நிறுவனத்தின் ஒரு இலவச ஆன்லைன் சேவைதான் AutoDesk Homestyler.. இந்தத்தளத்தில் நுழைந்தவுடன், புதிதாக வடிவமைக்க வேண்டுமா? அல்லது ஏற்கனவே உள்ள Design gallery -யிருந்து எடுக்க வேண்டுமா? என்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆரம்பத்தில் 2டி திரையில் Floor Plan உருவாக்கி 3டி வியூவில் பார்க்கலாம்.
தேவையான 3டி மாடல்களை காலரியிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் செய்து, நமது வீட்டை அழகு படுத்தலாம். Floor Tiles, Carpet, மற்றும் Wall Colou ஆகியவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றி, நமது கனவு இல்லத்தை வடிவமைத்து அதை மற்றவர்களோடு நமது Google, Yahoo போன்ற Open Id ஐ கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும், இப்படி உருவாக்கிய 3டி மாடலை சேமிக்க விரும்பினால், Export மெனுவிற்கு சென்று File வசதியை பயன்படுத்தி, , JPG, AutoCAD drawing / AutoDesk Revit file ஆகிய கோப்பு வடிவிற்கு மாற்றும் வசதியுண்டு. இப்படிExport செய்யப்படும் கோப்பு உருவாக்கப்பட்டு அதன் லின்க் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
இந்தக் கோப்புகளை AutoCAD மூலம் திறந்து கொண்டு, வேண்டிய மாறுதல்களை செய்து 33D Studio/ Maya போன்ற மென் பொருட்களுக்கு ஏற்றுமதி செய்து அழகாக 3டி மாடல்களை உருவாக்க இயலும். ஆக மொத்தத்தில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு Autodesk நிறுவனத்தின் இந்த இலவச சேவை மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இணையதளத்தின் முகவரி :
http://www.homestyler.com/designer

Permissions in this forum:
You cannot reply to topics in this forum