கலைஞர் அப்படி என்னதான் கூறிவிட்டார்
Mon Jul 18, 2016 8:43 pm
கலைஞர் அப்படி என்னதான் கூறிவிட்டார்?..........................
அஞ்சல் அலுவலகத்தில் கங்கை நீர் விற்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கிண்டல் அடித்துவிட்டாராம். கோபத்தால் கொப்பளிக்கிறார் பி.ஜே.பி. தேசிய செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்டை’ பறிகொடுத்தவருமான நபர் ஒருவர்.
என்ன காரணம் சொல்லிக் கோபப்படுகிறார்? தபால் நிலையங்களில் கடிதம் அனுப்புவது குறைந்துவிட்டது. இதனால் தபால் நிலைய பணியாளர்களுக்குத் தொடர்ந்து பணி வழங்கும் வகையில் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல் கருணாநிதி விமர்சிப்பது சரியல்ல என்று பேட்டி கொடுத்துள்ளார்.
நல்ல யோசனைதான். அப்படியே தபால் அலுவலகங்களில் கருவாடு விற்கலாம்; காய்கறிகள் விற்கலாம்; டாஸ்மாக்கின்- ஒரு பிரிவையும்கூட இணைக்கலாம் - வருமானம்தானே!
மத்திய அரசு பணியாளர்களின் வேலைக்கும் ஆபத்து ஏற்படாது அல்லவா! பழமொழியே இருக்கிறது - கருவாடு விற்ற காசு நாறவா போகிறது - நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?
விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper

Permissions in this forum:
You cannot reply to topics in this forum