ஒரே ஒரு மாதம் காபி, டீ அருந்துவதை நிறுத்துங்க... அப்படி என்ன மாற்றம் நடக்கும்?..
Tue Jun 21, 2016 7:34 pm
ஒரே ஒரு மாதம் காபி, டீ அருந்துவதை நிறுத்துங்க... அப்படி என்ன மாற்றம் நடக்கும்?..
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடித்து அன்றைய நாளைத் தொடங்குவோம். பின் பகல் நேரத்தில் மிகவும் தாகமாக இருக்கும் போது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றி ஜூஸ் குடிப்போம். அதுவே பகலில் தூக்கம் வந்தால் ஒரு கப் காபி குடிப்போம்.
உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நீரைத் தவிர மற்ற பானங்களைத் தான் குடிக்கிறோம். ஆனால் இவற்றைத் தவிர்த்து இந்த நேரங்களில் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் எல்லாம் ஏற்படுகிறது என்று தெரியுமா?
வேண்டுமானால் ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
#நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
ஆம், தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.
#கலோரிகள் குறையும்
ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.
#மூட்டுகள் ஆரோக்கியமடையும்
உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.
#ஆரோக்கியமான இதயம்
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.
#ஆற்றல் நிலையாக இருக்கும்
சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்
#முதுமை தடுக்கப்படும்
தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.
#எடை குறையும்
தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும். அதிலும் உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum