மரபணு மாற்றம் என்றால் என்ன?
Mon Mar 23, 2015 1:13 pm
வலையுகம் ஹைதர் அலி
“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு!”http://valaiyukam.blogspot.in/2011/04/bt.html
பொதுவாகவே தொடர்ந்து ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது Immunity அதிகரித்துவிடும்.நாம் உடலின் தனமை மாறிவிடும்.ஒரு நுண்ணுயிரின் விஷப் பகுதிலிருந்துமரபணுவை எடுத்து வேறொரு உயிரினத்தின் மரபணுவுடன் இணைக்கும் போது இந்த புரோட்டீன் வேறொரு சிஸ்டமுடன் வேலை செய்யும்.ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது.அது ஒரு புரோட்டீன்.அனைத்து வகையான புரோட்டீன்களையும் நமது உடல் ஏற்றுக் கொள்ளுமா என்பது நமக்குத் தெரியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில், சென்னை புதுக்கல்லூரில் உயிரி நுண்ணுயிர்த் தலைவராப் பணியாற்றி வருகிறார்.
புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் பள்ளிப் படிப்பை புதுச்சேரியில் முடித்து 1968இல் புதுக்கல்லூரி மாணவராக B.sc. முடித்து 1984-இல் புதுக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தொடர்ந்து M.Phil.,Ph.D. Dsc முடித்தார். 1974 முதல் 2001 வரை விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.
மண்புழு ஆராய்ச்சியில் (இன்று பள்ளிப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள மண்புழு குறித்த பாடங்கள் இவர் எழுதியவையே) பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்தவருமான பேராசிரியர் அவர்கள் சமரசம் இதழ் ஆசிரியர் குழுவிற்கு மரபணு மற்றம் குறித்த கேள்விகளுக்கு அளித்த பதில்.அந்த நேர்காணலிருந்து....
.மரபணு மாற்றம் என்றால் என்ன?
குழந்தை பிறக்கிறது என்றால் பார்த்ததும் அம்மா போல் மூக்கு,அப்பா போல் காது என்று சொல்கிறோம். இதற்குக் காரணம் மரபணுக்கள். அதே போன்று செடி கொடிகளுக்கும் மரபணு உண்டு. ஒரு தாவரம் எத்தகைய பண்புடன் இருக்க வேண்டும் என இறைவன் நிர்ணயித்து இருப்பது தான் மரபணுக்கள். விஞ்ஞானம் என்ற பெயரில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பணத்திற்காக விதைகளில் ஜீன்களை மாற்றி தாவரங்களின் உண்மையான தன்மைகளை மாற்றி அமைப்பதுதான் மரபணு மாற்றம்.
.மரபணு மாற்றத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விளக்கம் என்ன?
முன்பெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு தாவரங்களை ஒட்டுப் போடுவது வழக்கம். அதாவது ஒரு வகை மாங்காயையும் மற்றொரு வகை மாங்காயையும் இணைத்து விவசாயம் பண்ணுவது புளியங்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இன்றும் கூட ஒட்டு முறையில் எலுமிச்சைப் பழ சாகுபடி செய்கிறார்கள். ஆக ஒட்டுமுறை போன்றதுதான் மரபணு மாற்றம் என விளக்கம் தருகிறார்கள்.
.ஒட்டு போடுவதற்கும் மரபணு மாற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களின் விளக்கமே பொய்யானது. ஒட்டுமுறை என்பது மாங்காயையும் மாங்காயையும் இணைத்து மாங்காய் உற்பத்தி செய்வது. ஆனால் மரபணு மாற்றம் என்பது அப்படியல்ல. ஒரு தாவரத்துடன் எந்த ஒரு வகையிலும் தொடர்பில்லாத மற்றொரு பொருளின் மரபணுவை எடுத்து அந்தத் தாவரத்தின் இயல்பையே மாற்றுவதுதான் மரபணு மாற்றம்.
அதாவது கணினியில் Cut &Paste செய்வது போன்றதுதான் இந்த மரபணு மாற்றம். எதை வேண்டுமானாலும் வெட்டி எதனோடும் ஒட்டலாம்.அப்படி ஒட்டும்போது கட்டு போடுகிறோம். அதைதான் நாங்கள் Anti Biotic என்கிறோம்.
அந்த ஒட்டுப் போடுதல் எங்கு ஆரம்பமாகிறது எங்கு முடிகிறது என ஒரு Zone உருவாக்குகிறோம்.அதற்குதான் Starterd Zone,Ter minated Zone என்கிறோம்.அந்த இடத்தில் Anti Biotic சேர்க்கிறோம்.
பொதுவாகவே தொடர்ந்து ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது Immunity அதிகரித்துவிடும்.நாம் உடலின் தனமை மாறிவிடும்.ஒரு நுண்ணுயிரின் விஷப் பகுதிலிருந்துமரபணுவை எடுத்து வேறொரு உயிரினத்தின் மரபணுவுடன் இணைக்கும் போது இந்த புரோட்டீன் வேறொரு சிஸ்டமுடன் வேலை செய்யும்.ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது.அது ஒரு புரோட்டீன்.அனைத்து வகையான புரோட்டீன்களையும் நமது உடல் ஏற்றுக் கொள்ளுமா என்பது நமக்குத் தெரியாது.
மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் மனித உடலுக்கு எந்து அளவிற்கு ஆபத்தானவை?
எந்த ஒரு செடி கொடியும் ஒவ்வொரு வகையான தன்மைகளை வெளிப்படுத்தும்.அது மனித உடலில் அலர்ஜி நமைச்சல் போன்றவற்றை வெளிப்படுத்தும். இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.அப்படிப்பட்ட ஆய்வுகள் நம் நாட்டில் செய்யப்படவில்லை. ஆனால் அவர்களுடைய நாட்டில் சில ஆய்வுகள் செய்யப்பட்டன எனச் சொல்கிறார்கள். அந்த ஆய்வுகளும் வெளிப்படையாகச் செய்யப்படவில்லை.இந்த விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே ஆய்வுகள் மேற்கொண்டதால் அதனுடைய எதிர்விளைவுகள் மக்களுக்குச் சொல்லப்படவில்லை.
யாரும் அந்த ஆய்வுகள் குறித்து பார்ப்பதற்கோ மறு ஆய்வு செய்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.ஆக எதுவுமே வெளிப்படையாக இல்லை(Transparency). உடல் ரீதியாகவும் பல இழப்புகளை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் செயற்கை கருத்தரிப்பு மருத்துவ மனைகளே இதற்கு சன்று.ஆண்களுக்கு ஆண்மை இழப்பு, பெண்களுக்கு கருச்சிதைவு போன்றவையும் இந்தப் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படலாம்.இது குறித்த முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை.
எந்த நோக்கத்திற்காக இது கண்டுபிடிக்கப்பட்டது?
அதாவது,நெல்லை எடுத்துக் கொண்டால் கதிராக இருக்கும்.அதைச் சுற்றி களைகள் இருக்கும்.கதிர் வளர வளர அறுவடை நேரத்தில் அந்தக் களைகள் பிரித்தெடுக்கப்படும்.அப்படித்தான் அந்தக் காலத்தில் விவசாயம் செய்யப்பட்டது.குதிரைவால் சம்பா போன்றவை எல்லாம் அப்படித்தான்.
ஆக, மனிதன் இப்படி யோசிக்க ஆரம்பித்தான் நெல்லுக்கு போடப்படுகின்ற உணவில் களைக்கும் பெரும்பகுதி போய் விடுவதால் கதிர் வந்தவுடன் களைகளை வெட்ட வேண்டும் என்றான்; வெட்டப்பட்டது.
இதைப் பார்த்த பூச்சி ஆஹா கதிர் இருக்கின்றது என கதிரை பூச்சி தாக்கப் பார்த்தது. அதற்காகப் பூச்சிக் கொல்லியை அடித்தார்கள். பூச்சிக் கொல்லியை அடிக்க அடிக்க பூச்சிக்கே எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடுகின்றது.ஆக பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டதால் அதனைக் கட்டுப்படுத்த மரபணுக்களை மாற்றி விவசாயம் செய்யலாம் என்றார்கள். மரபணு மாற்றம் அந்தக் கதிரை சாப்பிடக்கூடிய பூச்சியைக் கொல்லும் என்றால் அந்த நெல்லை சாப்பிடக்கூடிய மனிதனை எந்த வகையில் பாதிக்கும் என்று கேள்வி எழுகிறது.
இது ஒரு நியாயமான கேள்வி.பூச்சி உடனடியாக செத்து விடும் என்றால் அதிகப்படியான தன்மைகள் கொண்ட மனித உடல் பகுதிபகுதியாகச் சாக வாய்ப்புள்ளது.
BT பருத்தி இருக்கும் போது BT கத்தரிக்காயை எதிர்க்க காரனம் என்ன?
நமது நாட்டில் இல்லாத கத்தரிக்காய் வகைகளே இல்லை. பல வகையான கத்தரிக்காய்களை நாம் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஒரு வகை கத்தரிக்காயின் விதையைப் பயிரிடச் சொல்வது எதற்கு?
இத்தனை வகையான காய்களை விட்டு விட்டு BT காத்தரிக்காயில் நிற்பது ஏன்? வட மாநிலங்களில் பைஙன் பர்தா என்பார்கள். அவர்களின் அனைத்து வகையான நிகழ்ச்சிகளிலும் இந்தபைஙன் பர்தா இடம் பேறும்.
இங்கு தென்னகத்தில் கத்தரிக்காய் பச்சடி இல்லாமல் பிரியாணி இல்லை; கத்தரிக்காய் இல்லாமல் சம்பர் இல்லை.ஆம் அதிகப்படியாக விற்பனை ஆகக் கூடிய ஒரு காயைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது. அந்த காய்தான் அதிகப்படியான விற்பனை ஆகக்கூடியாது. அதனால் அதிகப்படியான
இலாபம் கிடைக்கும் என கம்பெனிகள் ஆசைப்படுகின்றன.
இத்தனை நாள் விவசாயிகளே தங்களுக்குரிய விதைகளை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது இந்த BT விதைகளால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அந்த நிறுவனங்களிடமே விதைகளை வாங்க தள்ளப்படுகின்றனர். அதனால் ஒட்டுமொத்த பணமும் அந்த மேற்கத்திய நிறுவனங்களுக்குப் போய்விடுகின்றன. நமது நாட்டில் உள்ள மிகப் பெரிய பலம் பல்லுயிர்(Bio Diversity) இப்படிப்பட்ட பலமுள்ள நாட்டிற்கு இது தேவையா?
இயற்கை விவசாயத்தில் வல்லுநர்கள் ஆன நமது விவசாயிகளிடத்தில் இந்த மரபணு மாற்ற விவசாயத்தை திணிப்பது சரியா? தடுக்க என்ன வழி?
நல்ல கேள்வியை கேட்டு உள்ளீர்கள். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதைத் தடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்தது போன்றல்ல.நல்ல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.எருக்கள் மட்டுமல்ல நுண்ணுயிர்களைப் பிரித்து விவசாயம் செய்தல் எனப் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.இதில் நல்ல இலாபமும் நல்ல உற்பத்தியும் கிடைத்துள்ளன.
ஆக பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இது குறித்து போதிய அக்கரையுடன் விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும்.கான்வென்ட் கல்விச் சூழலில் குழந்தைகளுக்குத் தானியங்கள் குறித்து பாடம் கற்றுத் தர வேண்டும். குறிப்பாக தாய்மார்கள் சீரியல்களைக் குறைத்துவிட்டு Cerials மீது கவனம் செலுத்த வேண்டும். Cerials என்றால் சத்துள்ள உணவு தானிய வகை பயன்படுத்த வேண்டும். பாஸ்ட் புட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை மரபணு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
யாரலும் கண்டுபிடிக்க முடியாது. கடைகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் சேர்த்து வைத்துள்ளனர். அதனால் பார்த்ததும் கண்டுபிடிப்பது கடினம்.ஆக லேபிலிங் கொடுத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆபத்தானவை என்றால் அரசு எப்படி அனுமதிக்கிறது?
நமது அரசு இதைத் தள்ளி வைத்திருக்கிறது. நிராகரிக்கவில்லை. இதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரும் கூறியுள்ளார். ஒரு குழு அமைத்து இதைக் கண்காணிக்க வேண்டும்.
- கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum