என்னதான் செய்வான் தமிழன்.???
Wed Dec 10, 2014 6:16 am
காலையில எழுந்து பால் வாங்கப்போனா இப்ப 10 ரூபா அதிகம் கொண்டு போக வேண்டியிருக்கு.. சரி வேணாமுன்னு டீக்கடையில போயி குடிக்கலாம்ன்னா அவனும் 2 ரூபாய் ஏத்தப்போறானாம்..
சரி டீசல் விலை தான் குறைஞ்சு இருக்கே அப்ப காய்கறி விலையும் குறைஞ்சி இருக்கும்ன்னு நினைச்சி வாங்கப்போனா அங்க எதுவும் விலை குறையலை.. அப்ப ஏன்யா டீசல் விலை உயர்ந்த போது நீங்க இதை உயர்த்துனிங்கன்னு தனியா நின்னு குரல் உயர்த்தவும் பயமா இருக்கு..
கொஞ்சமா தேவைக்கு பணம் எடுத்த போதே பத்தாத சம்பளத்தை 5 தடவைக்கு மேல எடுத்தா அதுக்கும் 20 ரூபாயாம் இனிமே.. இனி தேவைக்கு அதிகமா எடுத்து வைச்சு அதை தேவையில்லாம செலவழிச்சு முழி பிதுங்கப் போறோம்..
30 ரூபா இளநி குடிச்சா கூட உள்ள இருக்குற தேங்காய வழிச்சு நமக்கே கொடுக்குறாங்க.. ஆனா நகைக் கடையில் சேதாரமான தங்கத்தை குடுங்கய்யான்னா எங்க கிட்ட 7% மேல சேதாரமே இல்ல இது ஆஹா..மத்த கடை ஸ்வாஹான்னு வாய்ல வடை சுடுறானுங்க...
வாங்குற சம்பளம் உயராம விலை வாசி உயருதே பற்றாக்குறையும் கடனும் அதிகமாகுதேன்னு வருத்தத்துல இனி டாஸ்மாக் போயி தண்ணியடிக்கவும் முடியாது.. அட சோகத்தை யாரு கிட்டதான் சொல்றதுன்னு.. எல்லாத்தையும் பதிவா டைப் பண்ணி முகநூலில் ஸ்டேட்டஸ் போடலாம்ன்னா இங்கேயும் நெட் கட்டணம் உயர்ந்துடுச்சாம்....அட.....
இப்ப தலைப்பை மறுபடியும் படிங்க... நான் சரியாத்தானே சொல்லியிருக்கேன்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum