இனி பிரீமியமும் குறைவு; ஆண்டுகளும் அதிகம்!
Wed Jun 15, 2016 7:43 pm
டேக் இட் ஈஸி தேர்டு பார்ட்டி பாலிஸி!சோ.கார்த்திகேயன்
ஆனால், இரு சக்கர வாகனங்களுக்கு பாலிஸி எடுப்பவர்களில் பலர், தொடர்ந்து அதைப் புதுப்பிப்பது இல்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, மூன்று ஆண்டுகளுக்கு பாலிஸி கொண்டுவரப்பட்டுள்ளது.
“இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போது அல்லது வாகன விபத்து ஏற்படும்போதுதான் பாலிஸியைப் புதுப்பிக்கவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. இதுவே, மூன்று ஆண்டுகள் பாலிஸி என்கிறபோது, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்துவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த பாலிஸி செல்லுபடியாகும்.
ஆண்டுதோறும் மூன்றாம் நபர் காப்பீட்டின் பிரீமியம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, 50,000 ரூபாய் மதிப்புகொண்ட 150 சிசி இரு சக்கர வாகனத்துக்கு, 2012-13 ஆண்டில் 357 ரூபாயாக இருந்த மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம், 2013-14 ஆண்டில் 422 ரூபாயாகவும், 2014-15- ஆண்டில் 464 ரூபாயாகவும், 2015-16 ஆண்டில் 538 ரூபாயாகவும் அதிகரித்தது. மூன்றாண்டு கால பாலிஸியை எடுக்கும்போது, அதிகரிக்கும் பிரீமியத்தைச் செலுத்தத் தேவை இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு லாபம்” என்றவர், ஓர் ஆண்டு பாலிஸிக்குப் பதில் மூன்று ஆண்டுகள் பாலிஸி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதையும் சொன்னார்.
இதுவே மூன்று ஆண்டு பாலிஸி என்றால், 30 சதவிகிதம் தள்ளுபடியுடன் 1,793 ரூபாய் செலுத்தினால் போதும். பாலிஸி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிஸிக்கு பிரிமீயம் 1,281 ரூபாய் மட்டுமே! ஆக, மூன்று ஆண்டு பாலிஸி பிரீமியத்தில் குறைந்தது 18 சதவிகிதம் முதல் 41 சதவிகிதம் வரை, அதாவது 384 ரூபாய் முதல் 896 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
மூன்று ஆண்டுகள் பாலிஸியைப் புதுப்பிக்கும் போது, எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால், மேலும் 30 சதவிகிதம் நிச்சயத் தள்ளுபடியும் 20 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியும் கிடைக்கலாம்.
தற்போது ஐ.ஆர்.டி.ஏ அமைப்பு மூன்று ஆண்டுகள் பாலிஸியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதித்துள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிஸி தரப்படலாம்” என்றார்.
2016-17 நிதி ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான கட்டணங்களை உயர்த்த ஐ.ஆர்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது. அதன்படி கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
மோட்டார் வாகன பாலிஸியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, ஓன் டேமேஜ் பாலிஸி (Own Damage Policy); அடுத்தது, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிஸி (Third Party Insurance). இதில் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ்தான் மிக முக்கியமானது.
ஆனால், இரு சக்கர வாகனங்களுக்கு பாலிஸி எடுப்பவர்களில் பலர், தொடர்ந்து அதைப் புதுப்பிப்பது இல்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, மூன்று ஆண்டுகளுக்கு பாலிஸி கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டு பாலிஸிக்கும், மூன்று ஆண்டுகள் பாலிஸிக்கும் என்ன வித்தியாசம்? என்ன பயன்?’ - இது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவன் விளக்கினார்.
“இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போது அல்லது வாகன விபத்து ஏற்படும்போதுதான் பாலிஸியைப் புதுப்பிக்கவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. இதுவே, மூன்று ஆண்டுகள் பாலிஸி என்கிறபோது, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்துவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த பாலிஸி செல்லுபடியாகும்.
ஆண்டுதோறும் மூன்றாம் நபர் காப்பீட்டின் பிரீமியம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, 50,000 ரூபாய் மதிப்புகொண்ட 150 சிசி இரு சக்கர வாகனத்துக்கு, 2012-13 ஆண்டில் 357 ரூபாயாக இருந்த மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம், 2013-14 ஆண்டில் 422 ரூபாயாகவும், 2014-15- ஆண்டில் 464 ரூபாயாகவும், 2015-16 ஆண்டில் 538 ரூபாயாகவும் அதிகரித்தது. மூன்றாண்டு கால பாலிஸியை எடுக்கும்போது, அதிகரிக்கும் பிரீமியத்தைச் செலுத்தத் தேவை இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு லாபம்” என்றவர், ஓர் ஆண்டு பாலிஸிக்குப் பதில் மூன்று ஆண்டுகள் பாலிஸி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதையும் சொன்னார்.
‘‘50,000 ரூபாய் மதிப்புகொண்ட 150 சிசி திறன்கொண்ட புதிய இரு சக்கர வாகனம் என்றால், ஓர் ஆண்டு பாலிஸியில் ஓன் டேமேஜ் பிரீமியம் - முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் 2,177 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம்.
இதுவே மூன்று ஆண்டு பாலிஸி என்றால், 30 சதவிகிதம் தள்ளுபடியுடன் 1,793 ரூபாய் செலுத்தினால் போதும். பாலிஸி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிஸிக்கு பிரிமீயம் 1,281 ரூபாய் மட்டுமே! ஆக, மூன்று ஆண்டு பாலிஸி பிரீமியத்தில் குறைந்தது 18 சதவிகிதம் முதல் 41 சதவிகிதம் வரை, அதாவது 384 ரூபாய் முதல் 896 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
மூன்று ஆண்டுகள் பாலிஸியைப் புதுப்பிக்கும் போது, எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால், மேலும் 30 சதவிகிதம் நிச்சயத் தள்ளுபடியும் 20 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியும் கிடைக்கலாம்.
தற்போது ஐ.ஆர்.டி.ஏ அமைப்பு மூன்று ஆண்டுகள் பாலிஸியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதித்துள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிஸி தரப்படலாம்” என்றார்.
2016-17 நிதி ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான கட்டணங்களை உயர்த்த ஐ.ஆர்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது. அதன்படி கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum