தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
"நரகம்" பைபிள் சொல்லுகிறபடி கண்டுப்பிடித்து விட்டார்களாம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"நரகம்" பைபிள் சொல்லுகிறபடி கண்டுப்பிடித்து விட்டார்களாம் Empty "நரகம்" பைபிள் சொல்லுகிறபடி கண்டுப்பிடித்து விட்டார்களாம்

Sat Apr 16, 2016 6:30 pm
"நரகம்" பைபிள் சொல்லுகிறபடி கண்டுப்பிடித்து விட்டார்களாம். ஆராய்ச்சியாளர்கள் அதிரடி...!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆதாரங்களுடன் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்ஸோபிளான்ட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளான்ட் (exoplanet or extrasolar planet) எனப்படும்.
1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒற்ற எக்ஸோபிளானட்கள் தேடல் ஆனது மிகவும் வேகமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறது..!
முன்பு போல் இல்லாது, தற்போது மிகவும் சக்தி வாய்ந்த ரேடியோ மற்றும் ஆப்டிக்கல் தொலைநோக்கிகள் (radio and optical telescopes) விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. உடன், பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் (Space probes) சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற பின்பும் கூட நமக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.
அப்படியாக கண்டுப்பிடிக்கப்பட்ட – பூமி கிரகம் போன்றே இருக்கும் – எக்ஸோபிளானட்களில் அரை டஜன் கிரகங்கள் மட்டுமே அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு திரவ நீர்வழி தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள கிரகங்கள் ஆகும்.
இதுபோன்ற தேடலின் போது பல வியத்தகு கிரகங்களும் கூட வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படியாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசித்திரம் தான் – கேன்ஸ்ரி 55 இ (Cancri 55 e).!
சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும்.
குறிப்பாக, கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் வியப்பான கலவையானது (eerie composition) அதை ஒரு நரகம் போல் காட்சிப்படுத்துகிறது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
கேன்ஸ்ரி 55 இ கிரகத்திற்கு இரண்டு முகங்கள் அல்லது இரண்டு அரைக்கோளம் (two faces or hemispheres) உள்ளது.
கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு ‘முகம்’ ஆனது கொதிக்கும் எரிமலைக்குழம்பால் மூடப்பட்டிருக்கிறது மற்றொரு முகமானது நிரந்திர இருளான நிலையில் (perpetual state of darkness) இருக்கிறது.
சூரியனை நோக்கி உள்ள கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் பகுதியானது சுமார் 2,000 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலையில் உள்ளது.
அது மட்டுமின்றி அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நொடியில் உயிரைப் பறிக்கும் விஷ வாயுவான ஹைட்ரஜன் சயனைடுதனை (Hydrogen Cyanide) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
செவ்வாய் போன்ற உயிர் வாழத் தகுதியில்லாத கிரகங்கள் பல இருப்பினும், பரிசுத்த வேதாகமத்தின் விளக்கங்களின் படி நரகம் ஆனது இப்படித்தான் இருக்கும் என்பதை ஒத்து இருக்கிறது கேன்ஸ்ரி 55 இ..!
பூமி கிரகம் முழுக்க ஆங்காங்கே எரிமலை ஆறுகள் மற்றும் பெரிய பெரிய மாக்மா குளங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் அப்படிதான் இருக்கும் கேன்ஸ்ரி 55 இ.
அது மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ, பூமி கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியால் (Spitzer Space Telescope) கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, இந்த கிரகத்தில் முதல் வெப்பநிலை வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் நிலவு பூமியோடு பூட்டப்பட்டுள்ளது போல, கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது சூரியனோடு பூட்டப்பட்டுள்ளது. எனவே தான் அக்கிரகத்தின் ஒரு பகுதியானது எப்போதுமே கொளுத்தும் சூரியனை எதிர்கொள்கிறது மறுபக்கம் நிரந்தரமாக இருளில் மூழ்கி கிடக்கிறது.
இவைகள் மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது ஒரு குண்டு வெடிப்பு அல்லது உள்வெடிப்பு நிகழ்ந்ததற்கு சமமான அளவிற்கு வலுவான கதிர்வீச்சை வெளியிடுகிறது.

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் இது போன்ற ஒரு விசித்திரமான மற்றும் படுபயங்கரமான ஒரு கிரகப்பொருள் இருக்கவே முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள், அதனால்தான் இதை "நரகம்" என்று குறிப்பிடுகின்றனர்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum