தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி Empty நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி

Thu Sep 12, 2013 10:25 pm
நரகம்: (HELL)

யோபு 26:6 அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

நரகம் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் HELL என்று குறிப்பிடப்பட்டு அதற்க்கு கீழ்க்கண்ட பொருள் தரப்பட்டுள்ளது.


Meaning:
1. the place or state of punishment of the wicked after death; the abode of evil and condemned spirits; Gehenna or Tartarus.

2. any place or state of torment or misery


Hell is a place of suffering and punishment in the afterlife- Wiki

பொதுவாக "நரகம் என்பது மரணத்துக்கு பின்னர் வேதனை அனுபவிக்கும் இடம்" என்று பொருள் கொள்ளலாம். மிக அதிக வேதனை அனுபவித்த  ஒருவர் 'நான் நரக வேதனையை அனுபவித்தேன்" என்று கூறுவதுண்டு 

இதன் அடிப்படையில் நரகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறிக்காமல் ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக உள்ளது. அதாவது   கொடிய வேதனை நிறைந்த அல்லது அனுபவிக்கும்  இடம் எதுவாக இருப்பினும் அது  "நரகம்" எனப்படுகிறது.

அதன் அடிப்படையில் நமது வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசனப்படி

சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே (கொடிய வேதனை உள்ள இடத்திலே) தள்ளப்படுவார்கள்.


பாதாளம் (HADES)

noun

1. Classical Mythology . a.  the underworld inhabited by departed souls.

பூமிக்கு கீழே இருக்கும் ஒரு உலகம் போன்ற இடத்தை   குறிக்குள் சொல்தான் பாதாளம் என்பது

ஏசாயா 14:9 கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து

என்ற வசனத்தின் மூலம் பாதாளம் பூமிக்கு கீழே இருக்கிறது என்பதை அறியலாம்

எண்ணாகமம் 16:33 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள் 

தாத்தம் அபிராம் கூட்டத்தார் மோசேயை எதிர்த்ததன் காரணமாக  பூமி பிளந்து அவர்கள்  உள்வாங்கி கொண்டது. இவர்கள்  உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள் என்று வேதம் சொல்கிறது.

யோபு 24:19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.

பாவிகளை எல்லாம் விழுங்கி வைத்திருக்கும் ஒரு இடம்தான் பாதாளம் என்று  வேதம் கூறுகிறது  இன்னும் பாதாளத்தைபற்றிய அனேக வசனங்கள் வேதத்தில் உண்டு!

எனவே பாதளம் என்பது பூமிக்கு கீழே மரித்தவர்கள் பாவிகள் போகும் ஒரு இடம். 

இந்த பாதாளம் கீழானபாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம் என்று மூன்று அடுக்குகளாக இருக்கிறது. 

நீதிமொழிகள் 15:24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி,.
சங்கீதம் 86:13  என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்
நீதிமொழிகள் 9:18  அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்

இந்த மூன்று அடுக்குகளான  பாதாளத்தில் நரக பாதாளம் என்னும் இடத்தில் மட்டும் கொடூர வேதனைகள் உண்டு! எனவேதான் அது நரக (வேதனையுள்ள) பாதாளம்என்று கூறப்படுகிறது.வேதம் இந்த இடத்தையும்  நரகம் என்றே குறிப்படுகிறது.  

மற்ற இரண்டு அடுக்கு பாதாளத்தில்  ஒன்றில் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத ஆனால் நேர்மையாய் வாழ்ந்த மனிதர்கள் தூக்க நிலையிலும்

ஏசாயா 57:2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.

அடுத்ததில் ஓரளவு துன்மார்க்க  மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் ஆனால் வேதனை இல்லாமலும்  இருக்கின்றனர் . 

சங்கீதம் 31:17 கர்த்தாவே,  துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்

இந்த பாதாளம் என்பது சாத்தானின் சாம்ராஜ்யம்  நடக்கும் இடம். அதன் தலைவன் அப்பொல்லியோன் என்னும் சாத்தான். இங்கு ஜனங்களை வேதனைபடுத்துபவர்கள் சாத்தானின் கூட்டாளிகள்.


அவியாத அக்கினி கடல்: (GEHANNA)

NOUN- 1 Gehenna - a place where the wicked are punished after death
where sinners suffer eternal punishment

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
அக்கினி  கடல்  என்பது தேவனின்  வெள்ளை சிங்காசன இறுதி நியாய தீர்ப்புக்கு பிறகு  சாத்தானும் கொடிய பாவம் செய்தவர்களும் தள்ளப்பட போகும் இடம்.  இங்கும்வேதனை உண்டு என்பதால் இதையும் நரகம் என்று சொல்லலாம்.

எருசலேமில்  இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கு   என்று ஒரு இடம் இருந்தது. அங்கு மோளேகு என்னும் தெய்வத்துக்கு  பிள்ளைகளை தீயில் தகனிக்கும் செயல் நடந்தது. 

10. ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,
மேலும் அங்கு தேவையற்ற பொருட்கள் வீசப்பட்டு  அவியாதஅக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டு இருக்குமாம் எனவே அந்த இடத்தை ஆண்டவர் இந்த அவியாத அக்கினியுள்ள இடத்துக்கு ஒப்பிட்டு கூறியுள்ளார்


ஆண்டவராகிய இயேசு பல இடங்களில் குறிப்பிட்டுள்ள அவியாத அக்கினி என்பது இந்த இடமே. இது சாத்தானுக்கு நித்தியமானது.   

மத்தேயு 18:8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,

மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
இது சாத்தானுக்காக ஆயத்தப்படுத்தபட்டது.

சாத்தான் தேவனால் ஜெயிக்கப்பட்டபின்  பாதாளத்தில் தற்போது இருக்கும் சாத்தானின்  கிரியைகள்  அனைத்தும்  சாத்தானோடு கூட இந்த அக்கினிகடலில் தள்ளப்பட்டு போவதால் அதன் பின் பாதாளம் என்ற இடமோ அங்கு வேதனையோ இருக்காது

வெளி 20:14 
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.


தொகுப்பு:


நரகம்  : இது மிகுந்த வேதனை உள்ள எந்த ஒரு இடத்தையும் குறிக்கும் சொல். எனவே மிகுந்த வேதனையுள்ள எந்த இடமும் நரகமே.

பாதாளம் : இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஆத்துமாக்கள் மரித்த உடன் போகும் இடம்.  இது சாத்தானின் சம்ப்ராஜ்யம்.  இங்கு நரக பாதாளம் என்னும் மிகுந்த வேதனை உள்ள இடம் உண்டு.

அக்கினிகடல் அல்லது அவியாத அக்கினி : இது இறுதி நியாயதீர்ப்புக்கு பின்னர்
சாத்தானும் அவனது கூட்டாளிகளும் தள்ளப்பட போகும் நித்தய இடம் இங்கும் வேதனை இருப்பதால் இதுவும் 
நரகமே! 



நன்றி: கார்னர்ஷ்டோன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum