பைபிள் - இவ்வளவு மதிப்பு கொண்டதா?
Tue Feb 02, 2016 2:34 pm
நமது மறைநூலாகிய பரிசுத்த வேதாகமத்தை பற்றி நமக்கு தெரிந்த காரியங்கள் மிகவும் குறைவு தான். நாம் அதை படிக்கிறோமோ, இல்லையோ? - உலகில் உள்ளவர்கள், பல வகைகளில் படிக்கிறார்கள்.
ஏனெனில் எந்த மொழியில் உள்ள பைபிளை எடுத்துக் கொண்டாலும், உயர்தர இலக்கணம் மற்றும் சொற்களின் பயன்பாட்டை பார்க்க முடியும். உண்மையை கூறினால், தமிழ் பைபிளில் உள்ள பல வார்த்தைகளை, இன்றைய கிறிஸ்தவர்கள் ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இதை ஏற்றுக் கொள்பவர்கள் மிகக் குறைவு.
அதே நேரத்தில் மொழி வளர்ப்பையும் தாண்டி, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், நாம் பயன்படுத்தும் பைபிள் உதவி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
படித்தது:
சமீபத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான புத்தகம் ஒன்றை படித்தேன். இந்நிலையில் அதில் ஒரு அறிவியல் அறிஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த சம்பவத்தை அறிந்தால், உங்களுக்கு நம் பைபிளின் மீது ஒரு தனி மரியாதை உண்டாகும் என்று நினைத்து வெளியிடுகிறோம்.
அந்த சம்பவம் இப்படி தான் தொடங்குகிறது... பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு சிறப்பான உடைகளை அணிந்த அவர், தன்னை ஒரு விஞ்ஞானி என்று மற்றவர்களிடம் கூறி கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
ஒரு ரயில் நிலையத்தில் இருந்து ஏறிய ஒரு சுமாரான மனிதன், விஞ்ஞானியின் அருகில் வந்து அமர்ந்து, பையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினார். விஞ்ஞானி ஆர்வத்தோடு, அந்த புத்தகத்தை பார்க்க, அது நம் பைபிள். அதை கண்ட விஞ்ஞானிக்கு வந்தது கோபம். பக்கத்தில் இருப்பவரை பார்த்து, என்னப்பா நீ, பார்க்க படித்தவன் போல இருக்கிறாய். இந்த அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில், பைபிள் படித்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு படிக்க அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வேண்டுமானால் தருகிறேன். அதை படி என்றார்.
விஞ்ஞானியின் பக்கத்தில் இருந்தவர் புன்முறுவலுடன், விஞ்ஞானியிடம் பேச ஆரம்பித்தார். விஞ்ஞானி தனது கண்டுபிடிப்புகளை குறித்தும், தனது ஞானத்தை குறித்தும் அரைமணி நேரத்திற்கு மேலாக விளம்பரம் செய்து கொண்டிருந்தார். அதையெல்லாம் கேட்ட அவர், அவரிடம் இருந்து ஒரு விசிட்டிங் கார்டு பெற்றுக் கொண்டு விடைப் பெற்றார்.
சில நாட்களுக்கு பிறகு, விஞ்ஞானியின் அறிவியல் கூடத்திற்கு (லேப்) சென்ற அந்த மனிதர், அங்கிருந்த காரியங்களை எல்லாம் பார்த்து, தனக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் இருப்பதாக கூறினார். தனது வீட்டிற்கு வருமாறு கூறி, விஞ்ஞானிக்கு தனது விசிட்டிங் கார்ட்டை அளித்தார். விசிட்டிங் கார்ட்டை பெற்ற விஞ்ஞானிக்கு தூக்கிவாரி போட்டது.
ஏனெனில் விசிட்டிங் கார்ட்டில் இருந்த பெயர் என்ன தெரியுமா? ஆல்பர்ட் ஆல்வா எடிசன். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். விஞ்ஞானிக்கு மேற்கொண்டு எதுவும் பேச வார்த்தைகள் இல்லாமல் நின்றார்.
அப்போது எடிசன், எனது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் மூலகாரணமாக அமைந்தது, இந்த பைபிள் தான். அதை படிக்க வேண்டாம் என்று கூறிய நீ, எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பாய் என்று இப்போது உனக்கு தெரிகிறதா? என்றார். விஞ்ஞானியின் குனிந்த தலை, தவறை ஒத்துக் கொண்டு அசைந்தது. பைபிளை பிடித்துக் கொண்டு எடிசன், அங்கிருந்து கிளம்பினார்.
சிந்தித்தது:
மேற்கூறிய சம்பவத்தில் இருந்து நம் கையில் இருக்கும் பைபிளின் மதிப்பு என்ன என்பது நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது அல்லவா? இன்றும் அந்த விஞ்ஞானியை போல பலரும், தங்களை பெரிய புத்திசாலிகள் என்று நினைத்து கொண்டு, பைபிளை அங்குமிங்குமாக படித்துவிட்டு, அதை தவறு என்று கூறுகிறார். ஆனால் உண்மையில் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்ததே நாம் படிக்கும் பைபிள் தான் என்பதை அந்த முட்டாள்கள் எப்போது தான் புரிந்து கொள்வார்களோ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum