- pauldanielபுதியவர்
- Posts : 4
Join date : 15/03/2016
மாற்கின் ஊழியம்
Tue Mar 15, 2016 9:21 am
✝ மாற்கு ✝
வாழ்க்கையில் சோர்வுற்று மிகவும் வேதனையடைந்து பின்வாங்கி போனவரா நீங்கள் அப்படியானால் மாற்குவின் வாழ்க்கையைப் பார்த்து சீர்படுத்திக் கொள்ளுங்கள்.
பவுலின் முதல் ஊழியப் பயணம் அது பவுலும் பர்னபாவும் எருசலேமுக்கு வந்து தர்ம ஊழியத்தை நிறைவேற்றின பின்பு மாற்குவை கூட்டிக்கொண்டு அந்தியோகியாவுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சீப்புரு தீவு வழியாக தற்போது துருக்கி என்று அழைக்கப்படும் நாட்டுக்கு வந்தார்கள். அங்குள்ள மக்கள் சற்றே முரடர்கள். சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்றபோது மாற்குவிற்கு என்ன ஆனதோ தெரியவில்லை. அவர் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை முரடர்களை கண்ட பயம் கூட காரணமாக இருக்கலாம். ஆண்டுகள் இரண்டு உருண்டோடின. தனது செயலுக்காக மிகவும் மனஸ்தாபப்பட்ட மாற்கு மீண்டும் பவுல் பர்னபாவுடன் சேர்ந்துக் கொண்டார்.
இரண்டாவது மிஷ்னரி பயணம் அது. பவுல் தன் பயணத்தை துவங்கும் வேளையில் மாற்கு உடன் செல்ல விரும்பினார். ஆனால் பவுல் அதற்கு சம்மதிக்க மறுக்கவே பர்னபாவுடன் இணைந்து சுவிசேஷத்தை அறிவித்தார். பின்வாங்கி போன மாற்குவின் பணி வீரத்துடனும், சுறுசுறுப்புடனும் காணப்பட்டது.
பதினோரு ஆண்டு இடைவெளிக்குப் பின் பவுலை சந்தித்தார். ' மிகவும் சிறப்பாக பணிசெய்த மாற்கு ஊழியத்தில் அவன் எனக்கு பிரயோஜனமானவன்' என்ற பாராட்டை பெற்றார். பவுலுக்கு மட்டுமின்றி பேதுருவுக்கும் உதவி புரிந்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சிறப்பாக எழுதினார். இது மாற்கு சுவிசேஷம் என்ற பெயரில் வேதாகமத்தில் இடம் பெற்று ஒவ்வெரு உள்ளத்திலும் இல்லத்திலும் கிறிஸ்துவை இடம்பெற செய்ய தூண்டுகின்றது.
அலெக்சாந்திரியாவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது விக்கிரக ஆராதனைக்காரர்களால் பிடிக்கப்பட்டு உயிருடன் தீ வைத்து கொழுத்தப்பட்டார். உடல் நெருப்பில் எரிந்துக் கொண்டிருக்கும் போதே கனமழையும் காற்றும் வீச உடல் கீழே விழுந்தது. உயிர் ஆண்டவருக்குள் இளைப்பாறுதல் அடைந்தது.
அன்பரே❗ மனதில் எழுர்ச்சி பெற்று வீரமுடன் செயல்பட அர்பணிப்பீர்களா
உதயம்: சிரேனே
உலகம: லிபியா
ஊழியம்: அலெக்சாந்திரியா
மனசாட்சி என்னும் சிறு தீபம் தேவனால் ஏற்றி வைக்கப்பட்டிருக்குமேயானால் அதை எவரும் முழுவதும் அவித்து போட முடியாது.

Re: மாற்கின் ஊழியம்
Wed Mar 16, 2016 8:42 am
நன்றி பிரதர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum