தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சரியான ஊழியம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சரியான ஊழியம் Empty சரியான ஊழியம்

on Wed Mar 25, 2015 11:14 pm
சரியான ஊழியம் 2v8r894
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சரியான ஊழியம் Empty Re: சரியான ஊழியம்

on Wed Mar 25, 2015 11:15 pm
ஊழியம்............
மத்தேயு 6:24
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.


ஊழியம் என்பது என்ன ? இன்று யாரை பார்த்தாலும் நான் ஊழியம் செய்கின்றேன் என்று சொல்லுகின்றார்கள். என்ன ஊழியம் செய்கின்றார்கள்.


ஊழியம் என்றால் ஒரு தியாகம் /அர்ப்பணிப்பு 

ஊழியம் செய்யும் பொழுது ஒரு தியாக ஜீவியம் வேண்டும் ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் , இன்று அநேகரை எடுத்துக்கொண்டால் பேருக்கும் புகழுக்கும் ஊழியம் செய்கின்றார்கள் . அந்த ஊழியம் யாருக்காக செய்கின்றார்கள் , அவர்களுக்காக செய்கின்றார்கள் , தேவனுக்காக செய்யவில்லை . தேவனுக்காக செய்யும் ஊழியத்தில் பொறுமை தாழ்மை , அன்பு , விட்டு கொடுத்தல் இப்படி எல்லாமே இருக்கும் , 


ஊழியம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொள்கின்றார்கள். அவர்களிடம் சற்று நேரம் அமர்ந்து இருந்து பேசி பார்த்தால் இருதயத்தின் ஆழத்தில் என்ன எல்லாம் இருக்கின்றது என்று தெரியும். வைராக்கியம் , குரோதம் , பகை , வீண் பேச்சு , கேட்ட வார்த்தை , துதித்தலும் சபித்தலும் ஒரு வாயில் வரக்கூடாது என்று வேதம் தெளிவாக சொல்கின்றது , வாய் திறந்தால் வாய் நிறைய கேட்ட வார்த்தை . தேவன் எப்படி இந்த ஊழியங்களை அங்கீகரிப்பார்.இன்று விபச்சாரம் பண்ணுகிறவனும் ஊழியம் செய்கின்றான் , பாவம் பண்ணுகிறவனும் ஊழியம் செய்கின்றான், (வட்டிக்கு பணம் கொடுத்தல் , மட்டவர்களை ஏமாற்றி தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்துதல், மற்றவர்களின் சொத்தில் தன்னுடைய குடும்ப தரத்தை உயர்த்துதல் இது எல்லாமே பாவம் )
கர்த்தருக்காக தன்னுடைய ஜீவனை அர்ப்பணித்து ஒரு சிலர் ஊழியம் பண்ணுகின்றார்கள்.


யாருடைய ஊழியம் அங்கீகரிக்கப்படும் ??? 

சங்கீதம் 15:2 உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து மனதார சத்தியத்தை பேசுகிறவன் தானே ..... கர்த்தருடைய பர்வதத்தில் தங்குவான் என்று வேதம் தெளிவாக சொல்லுகின்றது ,ஊழியம் பண்ணுகிற ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் !!!! ஊர் உலகை ஏமாற்றி திரிபவர்கள் ஊழியம் செய்யலாமா ? 2 மனைவி உடையவன் ஊழியம் செய்யலாமா ?


தன்னுடைய குடும்ப நிலவரத்தை உயர்த்துவதற்காக மற்றவர்களை ஏமாற்றி பணம் வாங்குகின்றவர்கள் ஊழியம் செய்தால் அங்கிகரிக்க படுமா ? 

ஊழியம் என்ற பெயரில் கடவுளையும் மனிதர்களையும் ஏமாற்றும் ஒரு கூட்டம் இவ்வுலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது , யாவரும் கவனமாக நிதானித்து நடக்க வேண்டிய காலம் இது , 


ஊழியம் என்ற பெயரில் மற்றவர்களை ஏமாற்றி நீங்கள் பிழைபீர்கள் என்றால் சாபம் உங்கள் சந்ததியை தொடரும் ,

ஆண்டவர் பாவத்துக்கு துணை செல்பவர் அல்ல ..நீ மக்களை ஏமாற்றுவதற்காக ஆண்டவரை துணைக்கு கூப்பிட வேண்டாம் , அவருடைய நாமத்தை வீணில் வழங்க வேண்டாம் .


ஊழியம் செய்ய வேண்டுமானால் சரியான வழியை தெரிவு செய்து ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய் .முதலில் நீ உன் வாழ்க்கையை சரி செய்து கொள்ள முயற்சி செய் .

இரண்டு எஜமானுக்கு எப்படி ஊழியம் செய்ய முடியும் . யேசுவுக்காக உலகத்தை விடு .உலகத்துக்காக ஏசுவை விற்காதே .இயேசு பரிசுத்தமானவர் உன்னுடைய அசுத்தமான வாழ்க்கைக்கு அவரை விலை பேசாதே , அவரை நீ அணுக வேண்டுமானால் பரிசுத்தமாய் மாறு. நீ மாறுவதும் மாறாமல் இருப்பதும் உன் விருப்பம் .தேவனுடைய நாமத்தை கனவீன படுத்த வேண்டாம் . உன் குடும்பம் உன்னை குறித்து சாட்சி சொல்லட்டும் பின்பு ஊழியம் செய்ய புறப்படு .


ஊழியம் பெருமைக்காக செய்வது அல்ல தேவனுடைய இராஜ்ஜியத்துக்காக மக்களை அழைத்து செல்லும் பணி ..நீ சரியான பாதையில் செல்லாமல் மற்றவர்களுக்கு எப்படி சரியான வழி காட்டுவாய் .குருடன் குருடனுக்கு வழி காட்ட முடியுமா ? . முதலில் உன் கண்ணை திறந்து பார் . மற்றவர்களுக்கு வழி காட்ட உனக்கு சரியான பார்வை கிடைக்கும்


நன்றி: தேவனுடைய சத்தம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum