எது ஊழியம்?
Wed May 11, 2016 8:48 pm
"ஊழியம் செய்தால் பூமியில் பெருத்த லாபமிருக்கிறது! எல்லாரும் ஊழியத்துக்கு ஓடியாங்கோ!” என்று இயேசு கூவி அழைக்கவில்லை!!!
மாறாக விரும்பி வந்தவர்களையும் “சற்று பொறு!” எனக்கு சீஷனானால் செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்த்துவிட்டு, தீர்க்கமான முடிவெடுத்துவிட்டு பின்னர் வா!” ஒழுங்காக யோசிக்காமல் கலப்பையில் கைவைத்து விட்டு பின்னால் வருத்தப்படாதே! என்கிறார். லூக்கா 14:25-35
தயவுசெய்து ஒருமுறை வாசித்துப் பாருங்கள். 30-ஆம் வசனம் சொல்லுகிறபடி ஊழியம் என்பது ”வரவு அல்ல செலவு” பற்றியது.
சேவை கொள்வதல்ல சேவை செய்வதே ஊழியம். (மத் 20:26)
பெற்றுக் கொள்வதல்ல விட்டுக் கொடுப்பதே ஊழியம். (லூக்கா 14:33)
ஐசுவரியத்தில் பெருகுவதல்ல தாழ்மையின் சிந்தையில் பெருகுவதே ஊழியம்.(மத் 11:29)
அடிப்பொடிகளை அல்ல சீஷர்களைச் சம்பாதிப்பதே ஊழியம்.(மத் 28:19)
சத்தியத்தை விற்று சம்போகமாய் வாழ்வதல்ல, சத்தியத்தைச் சொல்லி பலருக்கும் சத்துருவாய் மாறிவிடுவதே ஊழியம். (கலா 4:16)
தனக்கு ரசிகர்களைச் சேர்ப்பவன் ஊழியனல்ல. எல்லோருக்கும் அடிமையாய் மாறுபவனே ஊழியன். (1 கொரி 9:19)
கரன்ஸியில் திளைப்பவனல்ல, கர்ப்ப வேதனைப்படுபவனே ஊழியன் (கலா 4:19)
மாலைகளுக்குக் கழுத்தைக் கொடுப்பவனல்ல, பட்டயத்துக்குக் கழுத்தைக் கொடுப்பவனே ஊழியன்.(ரோமர் 16:4)
பிரபலத்தையல்ல பிறர் நலத்தை நாடுபவனே ஊழியன்.(எபி 11:24,25)
பிறர் தோளில் அமர்ந்து பவனி வருபவன் ஊழியன் அல்ல. தன் தோளில் சிலுவை சுமப்பவனே ஊழியன்.(லூக்14:27)
ஊழியன் என்பவன் விசுவாசிகள் பணத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குபவன் அல்ல. அநேகரை நீதிக்குட்படுத்தி ஆகாய நட்சத்திரமாகப் பிரகாசிப்பவன்.(தானி 12:3)
ஊழியம் செய்ய விரும்பும் யாரும் தயவு செய்து இன்றைய பிரபல ஊழியக்காரர்களைப் பார்க்காதிருங்கள். பார்த்தால் அவர்கள் சிக்கிய கண்ணிகளிலேயே நீங்களும் சிக்கிக் கொள்வீர்கள்.
நீங்கள் யாரையாகிலும் உதாரணமாகக் காண விரும்பினால் வில்லியம் கேரி, ஜான்வெஸ்லி, ஒயிட்ஃபீல்ட், வில்லியம் பூத், ஹட்சன்டெய்லர், டேவிட் லிவிங்ஸ்டன், சாது சுந்தர்சிங், டி.எல்.மூடி, ஜார்ஜ் முல்லர் போன்ற தேவமனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்.
இன்றைக்கு நல்ல ஊழியர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை. இருக்கிறார்கள் ஆனால் அவர்களில் பலர் பிரபலமாக இல்லை.
எல்லாவற்றையும் விட ஆண்டவர் இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு மகத்தான பாடம் இருக்கிறது.
“அவர் தம்மைத் தாமே வெறுமையாக்கினார் (பிலி 2:7)”
கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களில் பேசுவாராக! அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாகட்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum