சிக்கன கேக்
Wed Feb 03, 2016 10:46 am
தேவையான பொருட்கள்
மைதா…………………………. 3 கப்
பேக்கிங் பவுடர்…………… 2-1/2 தேக்கரண்டி
வெண்ணெய்………………. 3/4 கப்
முட்டை………………………. 4
சர்க்கரை…………………….. 1-1/2 கப்
உப்பு………………………….. 1/2 தேக்கரண்டி
தண்ணீர்…………………….. 3/4 கப்
விருப்பமான எசன்ஸ்…… 1தேக்கரண்டி
செய்முறை
மைதாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு கலந்து நன்கு சலிக்கவும். வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடித்துக் கொண்டு, அத்துடன் ஒவ்வொரு முட்டையாகப் போட்டுக் கலக்கவும். அத்துடன் 1/4 கப் தண்ணீரை விட்டுக் கலக்கவும். இப்படி 3/4 கப் தண்ணீரை மூன்று முறை முட்டைகளுடன் போட்டுக் கலக்கவும். பிறகு மாவையும் போட்டுக் கலந்துகொள்ளவும் வெண்ணெய் தடவி தயாரித்து வைத்துள்ள 8 அங்குல வட்டவடிவ டின்னில் கலவையைப்போட்டு, அவனில் 180 டிகிரியில் 40 நிமிடங்கள் வேகவைக்கவும். விருப்பமானால் சிறிது மைதா மாவுடன் முந்திரி, திராட்சயைப் புரட்டி, மேலே போட்டு, அலங்கரித்து வைக்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum