தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சிக்கன சமையல் : 30 வகை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிக்கன சமையல் : 30 வகை Empty சிக்கன சமையல் : 30 வகை

Mon Jul 06, 2015 11:44 pm
30 வகை சிக்கன சமையல் !தொகுப்பு: பத்மினிபடங்கள்: எம்.உசேன்

சிக்கன சமையல் : 30 வகை 0காய்கறிகளின் விலை, திடீர் திடீர் என்று நினைத்துப் பார்க்க முடியாத உச்சத்தைத் தொட்டு விடும்போது... 'எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?' என்று மண்டையிடியே வந்துவிடும்தானே! அதற்கு மருந்துபோடும் வகையில், 30 வகை 'சிக்கன ரெசிபி’களை வழங்கி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் 'பட்ஜெட் சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ நங்கநல்லூர் பத்மா.
 
''வாழைத்தண்டு, கீரை, பூசணிக்காய், பப்பாளி, வேப்பம்பூ போன்ற விலை அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, சுவையில் சூப்பராக இருக்கும் அயிட்டங்களை தந்துள்ளேன். குறைவான செலவில் இவற்றை செய்து பரிமாறி, நிறைவான பராட்டுக்களை அள்ளுங்கள்'' என்று வாழ்த்தும் பத்மாவின் ரெசிபிகளை, அலங்கரித்து பரிமாறுகிறார் செஃப் ரஜினி.
 
 
கீரைக்கூட்டு
தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
சிக்கன சமையல் : 30 வகை 1
செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, தண்ணீர் வடிய விட்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிடவும். நறுக்கிய கீரையுடன் தேவையான உப்பு கலந்து நன்றாக வேக வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெந்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது.
 
 
வெஜிடபிள் கோஸ்மல்லி
சிக்கன சமையல் : 30 வகை 2
தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், துருவிய கோஸ், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்கு வடித்துவிடவும். துருவிய கேரட், கோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இதே முறையில் முளைகட்டிய பயறு வகைகளையும் தயாரித்துச் சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகளை சேர்த்து (வெங்காயம், தக்காளி, பச்சை சோளம்) பச்சையாக சாப்பிடுவதால், அனைத்துச் சத்துகளும் அப்படியே உடலுக்கு கிடைக்கும்.
 
கத்திரிக்காய் ரசவாங்கி
சிக்கன சமையல் : 30 வகை 3
தேவையானவை: கத்திரிக்காய் - 250 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்,  வெல்லம் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி... உப்பு சேர்த்து, புளியை கரைத்து விட்டுக் கொதிக்க விடவும். தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்திருக்கும் கத்திரிக்காயுடன் சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
குறிப்பு: இதைச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
 
 
கேழ்வரகு இனிப்பு தோசை
சிக்கன சமையல் : 30 வகை 4
தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், அரிசி மாவு - ஒரு கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 50 மில்லி.
செய்முறை: வெல்லத்தை தூளாக்கி சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதில் இரண்டு வகை மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து தோசைகளாக வார்த்து, இருபுறமும் சிறிது நெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
 
 
வாழைப்பூ பொரியல்
சிக்கன சமையல் : 30 வகை 5
தேவையானவை: வாழைப்பூ - ஒன்று (சிறியது), தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளித் தண்ணீர் - சிறிய கப், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மோர் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் நரம்பு போல் உள்ள காம்பை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கி, சிறிது மோர் கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து நன்கு பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, மிளகாய் வற்றல் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை, பிழிந்து வைத்திருக்கும் வாழைப்பூ, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: வாழைப்பூவில் உள்ள துவர்ப்புச்சத்து சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு நல்லது. இதை துவையல், உசிலி, கூட்டு என்று பல விதமாகத் தயாரிக்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிக்கன சமையல் : 30 வகை Empty Re: சிக்கன சமையல் : 30 வகை

Mon Jul 06, 2015 11:44 pm
வாழைத்தண்டு புளிப்பச்சடி
சிக்கன சமையல் : 30 வகை 6
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு பெரிய துண்டு, புளி - எலுமிச்சம் பழ அளவு, பொடித்த வெல்லம் - 50 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மோர் - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை மேல் தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி நாரை நீக்கிப் பொடியாக நறுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் ஊற்றி நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, நறுக்கிய வாழைத்தண்டை எடுத்து அதனுடன் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு பித்தப்பையில் கல் சேராமல் தடுக்கும். நார்ச்சத்து உடையது. ஜூஸ் செய்தும் குடிக் கலாம்.
 
 
புரோட்டீன் தானிய கூட்டு
சிக்கன சமையல் : 30 வகை 7
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப் பட்டாணி, முளைகட்டிய பாசிப் பயறு, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, மொச்சை, பாசிப் பயிறு, கொள்ளு எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் சேர்த்து, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து... இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பயறு வகையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, வேக வைத்த பயறுடன் கலந்து  இறக்கவும்.
குறிப்பு: பயிறு வகைகளில் புரோட்டீன் அதிகம் என்பதால்... சுண்டல், சாலட், அடை, வடை என்று பல விதமாக பயிறு வகைகளைப் பயன்படுத்தலாம்.
 
 
ரத்ன லட்டு
சிக்கன சமையல் : 30 வகை 8
தேவையானவை: கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, சாமை அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, கொள்ளு, சிவப்பரிசி - தலா ஒரு சிறிய கப், பார்லி - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, சர்க்கரை - 250 கிராம்.
செய்முறை: கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், சாமை அரிசி, பொட்டுக் கடலை, ஜவ்வரிசி, பார்லி, கொள்ளு, சிவப்பரிசி எல்லாவற்றையும் கல் நீக்கி, தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து, அரைத்த மாவுடன் கலந்து, நெய்யை சூடாக்கி விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு:  விலை மலிவாக கிடைக்கும் இந்த தானியங்களில்  நிறைய சத்துகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு தினம் ஒரு உருண்டை கொடுத்தால், நல்ல வளர்ச்சி இருக்கும். முந்திரி, பாதாம் சேர்த்தும் அரைக்கலாம்.
 
 
 
சோயா  மொச்சை கிரேவி
சிக்கன சமையல் : 30 வகை 9
தேவையானவை: சோயா - 100 கிராம், மொச்சை - 100 கிராம், தக்காளி - 2, மிளகாய் வற்றல் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், தயிர் - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும் தக்காளி, மிளகாய் வற்றல், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும்.
குறிப்பு: சோயா மொச்சையுடன் இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது.
 
 
பிரெட் பக்கோடா
சிக்கன சமையல் : 30 வகை 10
தேவையானவை: பிரெட் - 10 துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரத்தை கட் செய்து நீக்கவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு  ஆகியவற்றை பிரெட்டுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்ததை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:  சட்னி அல்லது சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிக்கன சமையல் : 30 வகை Empty Re: சிக்கன சமையல் : 30 வகை

Mon Jul 06, 2015 11:44 pm
மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி
சிக்கன சமையல் : 30 வகை 11
தேவையானவை: கோதுமை மாவு - 500 கிராம், துருவிய கேரட், துருவிய முள்ளங்கி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்- ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். முள்ளங்கி துருவல், கேரட் துருவல், வெங்காயத்தாள் எல்லாம் சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கோஸ் துருவல் போட்டும் தயாரிக்கலாம். புதினா, கொத்தமல்லி நறுக்கிப் போட்டும் தயாரிக்கலாம்.
 
 
முருங்கைக்கீரைப் பொரியல்
சிக்கன சமையல் : 30 வகை 12
தேவையானவை: ஆய்ந்து எடுத்த முருங்கைக்கீரை - 250 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் - ஒன்று, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்கீரையைப் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, வெந்த கீரையை பிழிந்து போட்டு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக்கீரையில் அடை, வடை, கூட்டு என்று பல விதமாக தயாரிக்கலாம்.
 
 
கார்ன் ஊத்தப்பம்
சிக்கன சமையல் : 30 வகை 13
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், சோளம் - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து அரைக்கவும். சோளத்தை உரித்து முத்துக்களை எடுத்து தனியாக அரைத்து, மாவுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை உற்றி தோசைகளாக வார்த்து,  இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
குறிப்பு: சோளம் கிடைக்கும் சமயத்தில் வித்தியாசமான இந்த ஊத்தப்பம் தயாரித்து சாப்பிடலாம்.
 
 
நோன்பு அடை
சிக்கன சமையல் : 30 வகை 14
தேவையானவை: அரிசி - 250 கிராம், சிவப்பு காராமணி- 50 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள், தேங்காய் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு.  
செய்முறை: அரிசியை ஊற வைத்து களைந்து ஒரு துணியில் பரவலாகப் போட்டு, ஈரம் உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்து, மாவு சல்லடையால் சலித்து, பொன்னிறமாக மாவை வறுக்கவும். ஒரு பங்கு மாவுக்கு ஒன்றரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி, சூடாக்கி... கொதிக்கும்போது மாவைத் தூவி கிளற வேண்டும். காராமணியை வறுத்து ஊற வைத்து வேகவிடவும். கிளறிய மாவுடன் ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய தேங்காய், காராமணி சேர்த்துப் பிசைந்து வடை போல தட்டி, இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும்.
குறிப்பு: இதற்கு வெண்ணெய் சிறந்த காம்பினேஷன். இதே முறையில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து உப்பு அடையும் தயாரிக்கலாம்.
 
 
பப்பாளி கூட்டு
சிக்கன சமையல் : 30 வகை 15
தேவையானவை: பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய்  - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய்  - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும் . பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை போட்டு கலந்து... கொதிக்க வைத்து இறக்கவும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிக்கன சமையல் : 30 வகை Empty Re: சிக்கன சமையல் : 30 வகை

Mon Jul 06, 2015 11:45 pm
மரவள்ளிக்கிழங்கு அடை
சிக்கன சமையல் : 30 வகை 16
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், மரவள்ளிக்கிழங்கு - ஒன்று, துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய் வற்றல் - மூன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய் வற்றல் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து களைந்து தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்று சேர்க்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி, கேரட் துருவியில் துருவி, மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கறிவேப்பிலை நறுக்கிப் போடவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மரவள்ளிக்கிழங்கு அதிகமாக கிடைக்கும்போது வறுவல் தயாரித்து வைக்கலாம்.  வேக வைத்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.
 
சோனைக்கிழங்கு சாண்ட்விச்
சிக்கன சமையல் : 30 வகை 17
தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 2, மிளகாய் வற்றல் - 6, தனியா - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோனைக்கிழங்கை தோல் சீவி பிரெட் ஸ்லைஸ் வடிவத்தில் நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். சோம்பு, கசகசா, பூண்டு, மிளகாய் வற்றல், தனியா, வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைக்கவும். வேக வைத்த சேனைத் துண்டுகளின் இருபுறமும் அரைத்த மசாலாவை தடவி, நான்-ஸ்டிக் தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து இறக்கவும்.
குறிப்பு: மசாலா வாசனையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
 
 
 
பரங்கிக்காய் காரக்குழம்பு
சிக்கன சமையல் : 30 வகை 18
தேவையானவை: பரங்கிக்கீற்று - ஒன்று, புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, தேவை யான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கூடவே பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு நன்கு வெந்ததும் பெருங் காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: விருப்பமான காய்களில் இதே முறையில் காரக்குழம்பு தயாரிக்கலாம்.
 
 
பூசணிக்காய் மோர் கூட்டு
சிக்கன சமையல் : 30 வகை 19
தேவையானவை: பூசணிக் கீற்று - 2, தேங்காய் துருவல், தயிர் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணிக்காயை தோல் சீவி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து பூசணிக்காயுடன் சேர்க்கவும். பிறகு... தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, தயிர் விட்டு கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
 
 
மல்டி பருப்பு வடை
சிக்கன சமையல் : 30 வகை 20
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், துவரம்பருப்பு, உளுந்து - தலா ஒரு கப் (ஊற வைக்கவும்), மிளகாய் வற்றல் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக் கடலை, கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து... மிளகாய் வற்றல், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் சோளம், முளைவிட்ட பச்சைப் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்தும் தயாரிக்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிக்கன சமையல் : 30 வகை Empty Re: சிக்கன சமையல் : 30 வகை

Mon Jul 06, 2015 11:46 pm
வெங்காயத் துவையல்
சிக்கன சமையல் : 30 வகை 21
தேவையானவை: சின்ன வெங்காயம் - 200 கிராம், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம்பருப்பு - 50 கிராம், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து,  மிக்ஸியில் அரைக்கவும். சிறிது மசிந்ததும் புளி, உப்பு சேர்த்து அரைத்து, அதற்குப் பிறகு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடக்கூடாது.
குறிப்பு: இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சிறந்த காம்பினேஷன்.
 
 
கலவைக் காய் சொதிகுழம்பு
சிக்கன சமையல் : 30 வகை 22
தேவையானவை: கேரட், குடமிளகாய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் - தலா ஒன்று, அவரைக் காய் - 4, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 100 மில்லி, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய், கத்திரிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் ஓரளவு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்து காய்களையும் வதக்கி உப்பு சேர்த்து, புளி கரைத்துவிட்டு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: எல்லா காய்களும் மிச்சப்பட்டிருக்கும்போது இந்த குழம்பு தயாரிக்கலாம். தேங்காய்ப் பாலுக்கு பதில் தேங்காயை அரைத்து சேர்த்தும் கொதிக்கவிட்டு இறக்கலாம்.
 
 
 
சுண்டைக்காய் பொரியல்
சிக்கன சமையல் : 30 வகை 23
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுண்டைக்காயை காம்பு ஆய்ந்து சிறிது நசுக்கி,  எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த சுண்டைக்காய், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
குறிப்பு: வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்... வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமாக தயாரிக்கலாம்.
 
 
 
கார்ன்   காலிஃப்ளவர் சூப்
சிக்கன சமையல் : 30 வகை 24
தேவையானவை: காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், ஸ்வீட் கார்ன் (உதிர்த்தது) - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு  - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -  சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து, அதில் சோள மாவை  கரைத்து விட்டு... உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கோஸ் , கேரட், பட்டாணியிலும் சூப் தயாரிக்கலாம்.
 
 
பரங்கிக்காய் ஓலன்
சிக்கன சமையல் : 30 வகை 25
தேவையானவை: பாதி முற்றிய பரங்கிக்காய் - 2 கீற்று, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பரங்கிக்காயை வறுவலுக்கு நறுக்குவது போல நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய பரங்கிக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
குறிப்பு: சிறிய பரங்கிக்காயில் (பரங்கிப் பிஞ்சு) அடை, பால் கூட்டு தயாரிக்கலாம். பாதி முற்றியதும் ஓலன் தயாரிக்கலாம். நன்கு முற்றியதும் அல்வா, பொரியல், சாம்பார் செய்யலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிக்கன சமையல் : 30 வகை Empty Re: சிக்கன சமையல் : 30 வகை

Mon Jul 06, 2015 11:46 pm
கோவைக்காய் துவட்டல்
சிக்கன சமையல் : 30 வகை 26
தேவையானவை: கோவைக்காய்  - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2, மிளகாய்த்தூள்  - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த கோவைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.
குறிப்பு: இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.
 
 
வெந்தயக் கீரை பணியாரம்
சிக்கன சமையல் : 30 வகை 27
தேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கட்டு, இட்லி மாவு - 250 கிராம், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். வெந்தயக் கீரையில் சாம்பாரும் செய்யலாம்.
 
 
எள்ளு சாதம்
சிக்கன சமையல் : 30 வகை 28
தேவையானவை: அரிசி - 250 கிராம், எள்ளு - 50 கிராம், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலை வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து எண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு: இதற்கு தயிர் பச்சடி சிறந்த காம்பினேஷன். எள் எலும்புக்கு வலிமை தரும். எள் உருண்டையும் தயாரித்து சாப்பிடலாம்.
 
 
வேப்பம்பூ பச்சடி
சிக்கன சமையல் : 30 வகை 29
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - ஒன்று, எண்ணெய்  - ஒரு டீஸ்பூன், வெல்லம் - 100 கிராம், உப்பு - சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து... புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன் வேப்பம்பூவை வறுத்துப் போட்டு இறக்கவும்.
குறிப்பு: வேப்பம்பூ சீஸனில் வேப்பம்பூவை சேகரித்து வைத்தால்... பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்தலாம். பித்தத்துக்கு மிகவும் நல்லது.
 
 
கேப்சிகம் ரைஸ்
சிக்கன சமையல் : 30 வகை 30
தேவையானவை: அரிசி - 250 கிராம், குடமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 2, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: குடமிளகாயுடன் பேபி கார்ன், புதினா சேர்த்தும் தயாரிக்கலாம்.
Sponsored content

சிக்கன சமையல் : 30 வகை Empty Re: சிக்கன சமையல் : 30 வகை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum