சாக்லட் கேக்
Wed Feb 03, 2016 10:45 am
(மைக்ரோ அவன்)
தேவையான பொருட்கள்
முட்டை………………………..2
பொடித்த சர்க்கரை………..3/4 கப்
(பொடிக்காவிடில் கேக் கருகிவிடும்)
கொக்கோ பவுடர்………….2 தேக்கரண்டி
மைதா………………………….1/2 கப்
பேக்கிங் பவுடர்…………… 1 தேக்கரண்டி
பால்……………………………. 1/4 கப்
எண்ணெய்………………….. 1/2 கப் .
(நல்லெண்ணெய் கூடாது)
வெனிலா எசன்ஸ்……….. 1/2 தேக்கரண்டி
செய்முறை
முட்டையையும் பொடித்த சர்க்கரையையும் 10 நிமிடங்கள் நன்கு பொங்கப் பொங்க அடிக்கவும். அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். மாவு, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். அடித்த முட்டைக் கலவையில் சலித்த மாவையும், பாலையும் மாறி மாறி ஊற்றிக் கலக்கவும். இந்தக் கலவை சாதாரண கேக் கலவையைவிட சிறிது தளர்த்தியாக இருக்கும். இதை மைக்ரோ அவனில் 5 அங்குல வட்டமும், 2 அங்குல ஆழமும் உள்ள பாத்திரத்தில் 5 நிமிடங்கள் ஹையில் வைத்து மூடாமல் வேகவிடவும். இதைவிட அதிக நேரம் வேக விடவேண்டாம். வெந்த கேக்கை அவனிலேயே 4-5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 5-10 நிமிடங்கள் ஆற வைத்து, எடுத்துப் பரிமாறவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum