ஈஸி கேக் - செய்து பாருங்கள்
Fri May 13, 2016 10:37 pm
ஈஸி கேக்
தேவையானவை:
மேரி பிஸ்கட் - 10
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பனீர் - 200 கிராம்
ஜாம் (விருப்பமான ஃப்ளேவர் ) - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - 200 மில்லி
மில்க்மெய்ட் - 100 மில்லி
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
ஜெலட்டின் - 1 டீஸ்பூன்
ஆரஞ்சு சுளை - 10
செய்முறை:
சதுர அல்லது வட்ட வடிவ பாத்திரத்தில் பிஸ்கட்டை கைகளால் பொடித்து சேர்க்கவும். அதன் மேல் உருக்கிய வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி மரக்கரண்டியால் நன்கு அழுத்தி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பனீரைத் துருவிக் கொள்ளவும்.
அதனுடன் கெட்டித் தயிர், மில்க்மெய்ட், பொடித்த சர்க்கரை, ஜாம் ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
வெதுவெதுப்பான நீரில் ஜெலட்டினை சேர்த்து அது கரைந்ததும் (அப்படியே விட்டால் கெட்டியாகிவிடும்) மில்க்மெய்ட் கலவையில் ஊற்றவும்.
பிறகு ஃப்ரிட்ஜில் செட்டான பிஸ்கட் கலவையை வெளியே எடுத்து ஜெலட்டின் கலவையை ஊற்றவும். மேலே ஆரஞ்சு சுளைகளை பரப்பி வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
பிறகு, வெளியே எடுத்து விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum