சர்ச்சுக்கு போகும் போது பைபிள் எடுத்துட்டு போகணுமா?
Tue Feb 02, 2016 2:39 pm
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கிறிஸ்துவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் வருகிறது. அதில் ஒன்று, சர்ச்சுக்கு போகும் போது, பைபிள் எடுத்து கொண்டு போகணுமா? என்பதே.
என்னப்பா இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் உண்மை என்னவென்றால், இன்றைய கிறிஸ்துவர்களில் பெரும்பாலானோர் சர்ச்சிற்கு போகும் போது பைபிள் எடுத்துக் கொண்டு செல்வதில்லை. இது குறித்து ஒருவரிடம் கேட்டதற்கு, ஸ்டைலாக உடை உடுத்தி செல்லும் போது, பைபிள் கையில் பிடித்து கொண்டு போவது அவ்வளவு சவுகரியமாக இல்லை என்றார்.
இன்று சபைக்கு செல்லும் போது, வேதாகமம் கொண்டு போக தேவையில்லாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று, கிறிஸ்துவ சபைகளில் வசதி, வாய்ப்புகள் பெருகியது.
இன்றைய பெரும்பாலான ஆவிக்குரிய சபைகளில், பெரிய திரைகள் அமைத்து பாடப்படும் பாடல்கள், பிரசங்கம் செய்யும் வேத பகுதிகள், பிரசங்கம் செய்பவரின் வீடியோ என்று எல்லாவற்றையும் தெளிவாக போட்டு காட்டுகிறார்கள். இதனால் சபைக்கு வரும் மக்களுக்கு பைபிள், பாட்டு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டிய தேவை வருவதில்லை. சபையில் வந்த இந்த வசதி வாய்ப்புகளை நாங்கள் குற்றப்படுத்தவில்லை. மாறாக, வசதிகள் நம்மை சோம்பேறிகளாக மாற்றிவிட்டதோ என்று தோன்றுகிறது.
இந்த காரியங்களை குறித்து பேசிக் கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர் தனது கருத்தை கூறினார். இப்போது உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது. ஆன்ட்ராய்டு மொபைல்போன் ஒன்றை வாங்கி, பைபிள் சாப்ட்வேரை டவுன்லோடு செய்தால் நம் கையில் பைபிள் வந்துவிடும். தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
நண்பர் கூறியது நல்ல விஷயம் தான். எங்கு போனாலும் பைபிளை தூக்கி கொண்டு போக முடியாது. மொபைல்போனில் பைபிள் இருந்தால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் வாசிக்கலாம். ஆனால் அதற்காக தேவாயத்திற்கு செல்லும் போதும், மொபைல்போனிலும், பெரிய திரைகளிலும் பார்த்து பைபிள் படிக்கும் பழக்கம் எந்தளவிற்கு பலன் தரும் என்று தெரியவில்லை. ஏனெனில் சர்ச்சில் கூறும் வேத பகுதியை மொபைலில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் வரும் செய்திகளின் தகவல்களை உங்களுக்கு மொபைல்போன் காட்டும். அப்போது தேவ சமூகத்தில் இருக்கிறோம் என்ற பயம் மறைந்து, மனம் வேறு எண்ணங்களுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது அல்லவா? மேற்கூறிய காரியத்தை பல சபைகளிலும், நாங்கள் வழக்கமாக பார்த்து வருகிறோம் என்பதே ஒரு கசப்பான உண்மை.
அனுபவித்தது:
தேவாலயத்திற்கு பைபிளை எடுத்துச் செல்வதால், நான் கற்றுக் கொண்ட ஒரு காரியத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். நான் வேலைக்காக வெளியூருக்கு முதல் முறையாக சென்ற போது, ஆவிக்குரிய சபை ஒன்று கிடைக்காமல் சிரமப்பட்டேன். சொந்த ஊரை சேர்ந்தவர்கள் மூலம் எனக்கு அளிக்கப்பட்ட முகவரிக்கு சென்று பார்த்த போது, அது 3 பஸ்கள் ஏறி இறங்கி செல்ல வேண்டி இருந்தது.
முதல் வாரம் ஞாயிறு ஆராதனைக்கு சென்ற நான் மனதிலும், உடலிலும் தளர்ந்து போனேன். அன்று முதல், நான் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு ஆவிக்குரிய சபையை, எனக்கு காட்ட வேண்டும் என்று தேவனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தேன். சனிக்கிழமை வரை எந்த சபையும் என் கண்களில் படவில்லை. மனதில் சிறிய பயம் தோன்றிய நேரம், என்னோடு தங்கியிருந்த இரட்சிக்கப்படாத நண்பர்கள் வாக்கிங் போகலாம் என்று கூறி, என்னையும் அழைத்தனர். எனக்கு வாக்கிங் போகும் போது சபையை கண்டுபிடிக்கலாம் என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. நாங்கள் சற்று காடு போன்ற இடத்தை கடந்து செல்லும் போது, தூரத்தில் ஒரு சிலுவையுடன் கூடிய கிறிஸ்துவ சபையின் பெயரை பார்த்தோம். ஆனால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை.
சபைக்கு செல்ல வழி தெரியாத நிலையில், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு ரூம்மிற்கு திரும்பினேன். ஞாயிறு காலையில் வழக்கமாக சபைக்கு செல்லும் நேரத்தில், நாங்கள் நேற்று நடந்து சென்ற பாதையில் நடக்க ஆரம்பித்தேன். சற்றுத் தொலைவில் தெரிந்த அந்த சபையின் பலகை சில மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது.
முக்கிய சாலையில் நின்று கொண்டு, அதற்கு மேல் வழி தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த சாலையை ஒரு வெள்ளை சேலை கட்டிய சகோதரி கையில் பைபிளை பிடித்துக் கொண்டு கடந்து சென்றார். அந்த சகோதரி, நான் வழி தெரியாமல் நிற்கும் சபையை நோக்கி செல்வது போல தெரிந்தது. எது எப்படியோ அவரை பின்பற்றி சென்றேன்.
பல வளைவுகளை கடந்து சென்ற போது, நான் தூரத்தில் இருந்து பார்த்த சபையை அடைந்தேன். நான் மனதில் நினைத்ததை விட, சிறப்பான ஆவிக்குரிய சபையாக இருந்தது. நான் அந்த ஊரில் இருந்து, மாற்றலாகும் வரை அங்கே சென்று தேவனை ஆராதிக்க முடிந்தது.
சிந்தித்தது:
இந்த சம்பவத்திற்கு முன் வரை, சபைக்கு செல்லும் போது பைபிளை கையில் எடுத்துச் செல்வதில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. ஆனால் அந்த சகோதரியை பின்பற்றி ஒரு சபையை கண்டுபிடிக்க, அவர் கையில் இருந்த பைபிளும், அவரது உடை அலங்காரமும் தான் எனக்கு உதவியது என்பதில் சந்தேகமே இல்லை. எனவே நானும் அன்று முதல் சபைக்கு செல்லும் போது பைபிளை கையிலேயே எடுத்து செல்ல துவங்கினேன். ஏனெனில் என்னை பார்க்கும் பலரும், ஆராதனைக்கு வரலாம் இல்லையா?
இந்த சம்பவத்தின் மூலம் நாம் சபைக்கு பைபிள் எடுத்துச் செல்ல வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் பைபிளை கையில் எடுத்து செல்லும் பழக்கத்தை பின்பற்றுகிறேன். அப்ப நீங்கள்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum