ஒவ்வொரு முறையும் வேதம் வாசிக்கும் போது கவனிக்க வேண்டியது,
Wed Dec 16, 2015 12:27 am
1 எழுதப்பட்டது என்ன?
2 எழுதப்பட்டது யாரைப் பற்றி?
3 எழுதப்பட்டது யாருக்கு?
4 எழுதப்பட்டது எந்த வார்த்தைகளில்?
5 எழுதப்பட்டது எப்போது?
6 எழுதப்பட்டது எங்கே?
7 எழுதப்பட்டது எதற்காக?
8 எழுதப்பட்டது எச்சூழலில்?
9 எழுதப்பட்டதற்கு முன்னாலிருப்பது என்ன?
10 எழுதப்பட்டதற்குப் பின் வருவது என்ன?
இவற்றை மாத்திரம் கவனித்தால் போதும் வேதம் நன்றாய் விளங்கும்
Re: ஒவ்வொரு முறையும் வேதம் வாசிக்கும் போது கவனிக்க வேண்டியது,
Wed Dec 16, 2015 12:33 am
வேதத்தை வாசித்து புரிந்து கொள்ளுவதில் நம்மிடம் அதிகக் குறைகள் உள்ளன.
வேதத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்ள ஒரு சில அடிப்படைக் கோட்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. வேதாகமத்தின் வார்த்தைகளிலிருந்து ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது
வேதாகமத்தில் திருத்தம் செய்கிற ஒருவரோடு அமர்ந்து தியானிக்க வேண்டாம். பரிசுத்த வேதாகமத்தோடு நாம் ஈடுபடுகையில் நாம் அதனை மாற்றாமல் வேதம் நம்மில் மாற்றம் கொண்டுவர அனுமதிப்போம். அப்போஸ்தலன் பவுல் வாழ்ந்த காலத்திலேயே, ஜனங்கள் வேதாகம வார்த்தைகளை திருத்தி மாற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
2. வேதாகம வார்த்தைகளை அதன் சூழ்நிலைகளை விட்டு எடுக்க வேண்டாம்
எப்பொழுதும் சொல்வது போல" சந்தர்ப்பம் அற்ற ஒரு வாக்கியம் காரணம் அற்றதாக மாறிவிடும்". ஒரு வசனத்தை அது சொல்லப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளின் வேளிச்சத்திலே எப்பொழுதும் கற்றுக் கொள்ள வேண்டும்.
3. வேதத்தின் வார்த்தைகளை நமக்கு புரியாத வெளிச்சத்திலே புரிந்து கொண்டு ஒரு போதும் விளக்கம் கொடுக்க வேண்டாம்
நமக்கு முன்கூட்டியே இருக்கிற இறையியல் அபிப்பிராயங்களைக் கொண்டு வேதாகம வார்த்தைகளை நிர்ணயம் செய்யக்கூடாது. அதற்கு மாறாக வெதாகமமே இறையியலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
"விளக்குத்தண்டில் உள்ள வெளிச்சம் ஒவ்வொன்றும் நேரெதிராய் எரிவது போல" (யாத் 25:37) ஒரு வேதத்தின் வசனத்தை அறிந்து கொள்ள, வேதத்திலேயே விடை காண வேண்டும். எடுத்துக் காட்டாக, மத்தேயு 7:6 ல் சொல்லப்பட்ட வேதாகம வார்த்தைகளான "பன்றி" மற்றும் "நாய்"என்பதின் அர்த்தத்தை அறிய 2பேதுரு 2:22 ல் பார்த்தால் போதும்
4. முடிந்தவரை வேதாகம வசனங்களுக்கு தெளிவான வெளிப்படையான சொற்களின்படி இருக்கும் அர்த்தத்தை எடுங்கள்
" சொல்லப்பட்ட சொற்கள் தெளிவான அர்த்தத்தை சொன்னால், வேறெந்த அர்த்தத்தையும் தேட வேண்டாம், இல்லையேல் அது முற்றிலும் அர்த்தமற்றதாகி விடும்.
மறைபொருள் ஒன்றையும் சொல்லாதிருக்குமானால், அந்த வசனத்தை நேரடியான தெளிவான அர்த்தத்தில் எடுப்பது நல்லது. உதாரணமாக நல்ல சமாரியன் உவமையில் வரும் இரண்டு காசுகள் ஒரு சில பிரசங்கியார் சொல்வது போல, அது இரண்டு காசுகள் அல்ல என்றும், அதற்கு வேறு ஆவிக்குரிய அர்த்தங்கள் உள்ளன என்றும், அவை பொதுவாக புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் குறிக்கின்றன என்றும் போதிக்கிறார்கள்.
மேலும் அந்த உவமையில் வரக்கூடிய சத்திரம் சபையைக் குறிக்கிறது என்றும் ஆதாரமில்லாத தங்கள் சொந்த கருத்துக்களை தேடிக்கண்டுபிடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விளக்கங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அவை நம்மை தவறான சத்தியத்திற்கு வழிநடதும் என்பதில் ஐயமில்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum