நீங்கள் தேவனுக்கு "குதிரையா அல்லது கழுதையா"
Thu Dec 17, 2015 9:51 am
இயேசு கிறிஸ்து தன்னோடு இருக்கும் சீடர்களிடம் "என்னை ஒவ்வொரு முறையும் நீங்கள் கனப்படுத்த வேண்டும்,
என்னை தேடி வரும் மக்களிடம் நான் செய்த அற்புதங்களை பற்றி சொல்ல வேண்டும்,
வருகின்ற மக்களை சிறிது நேரம் காக்க வைத்த பின்னரே என்னிடம் அனுப்பவேண்டும்,
நான் வெளியில் செல்ல தனி ரக குதிரைகளும், ரதங்களும் வேண்டும், பிரத்யேக உடை வேண்டும்,
அனைத்து இடங்களிலும் நீங்கள் என்னை "புகழ்த்து" கொண்டே இருக்கவேண்டும் என்று எங்கேனும் சொல்லியதுண்டா???
வேதம் நமக்கு தெளிவாக சொல்கிறது... இயேசு கிறிஸ்து ஒருபோதும் தன் சீடர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை, அவர்களிடம் தான் ஒரு இறைவன் என்றோ? தலைவர் என்றோ? பாகுபாடு பார்த்தது கிடையாது, தன் சீடர்களின் கால்களை தன் கையால் கழுவிவிடும் தாழ்மையின் உருவம் அவர் மட்டுமே!!!
ஆனால் இன்றோ?
பல திருசபைகளில் போதகர்களும், ஆலய நிர்வாகிகளும் செய்யும் காரியம் இப்படியாக தான் இருக்கிறது,
"தேவாலயத்திற்குள் தங்கள் பெருமைகளை மாறி மாறி புகழ்ந்து மகிழ்ச்சி அடைகின்றனர், நான் தான் இதை செய்தேன், அவர் தான் அதை செய்தார் என்பதும், கைகள் தட்டிகொள்வதும், பொன்னாடைகளை போர்த்திகொள்வதும்!!!
சரி இவர்கள் இப்படி என்றால் சில போதகர்கள்,ஊழியர்கள் இன்னும் ஒரு படி மேல், தாங்கள் வரும்போது சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும், இசை வாத்தியங்கள் வீதி முழுவதும் ஒலிக்கவேண்டும் என்று ஒரு கலாச்சாரமாகவே உருவாக்கி விட்டார்கள் என்பது வேதனையான காரியம்,
இதை ஒரு பெருமையாகவே நினைகிறார்கள், அப்படி பெருமையாக நினைக்காதவர்கள் பின்பு ஏன் இவற்றை விரும்ப வேண்டும்?
செயல்படுத்த வேண்டும்??? இதில் வேடிக்கை என்னவென்றால்?
50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா வந்த "மிஷினரிகள்" ஒருவர் கூட தன் புகழை மற்றவர் பேசவேண்டும் என்று நினைக்காமல் உண்மையாய் ஊழியம் செய்து ரத்த சாட்சியாக மரித்தனர் அவர்கள் தான் சரித்தர நாயகர்களாக இன்னும் வாழ்ந்துகொண்டிருகிறார்கள்...
இந்த புகழ்,பெருமை, கெளரவம் இவற்றையெலாம் பார்க்கும் இளைய தலைமுறைக்கு எப்படி ஆத்தும ஆதாயம் செய்யும் சிந்தனை வரும்???
"குதிரை" ஒரு கௌரவமான விலங்கு! பெரிய பதவியில் இருக்கும் அரசர்கள், மந்திரி,தளபதி,சிப்பாய் போன்ற அரசு ஊழியர்களின் பொக்கிஷம் என்றே சொல்லலாம்!! இருந்து என்ன பயன்???
எதற்குமே பயன் இல்லாதது என்று உலகமே முத்திரை குத்தின "கழுதை" தான் அந்த உன்னதரை தூக்கி சுமந்தது!!! அது தான் தேவ சித்தமும் கூட, முடிவு செய்யுங்கள் நீங்கள் தேவனுக்கு "குதிரையா அல்லது கழுதையா" என்று.....
-உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum