தேவனுக்கு விரோதமானது
Mon Jun 15, 2015 3:35 pm
லேவியராகமம் 18: 22. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
லேவியராகமம் 20:13. ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
I கொரிந்தியர் 6: 9,10 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
ரோமர் 1 : 26,27 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
ஓரினச்சேர்க்கை என்பது முற்றிலுமாய் தேவனுக்கு விரோதமானது என்பது வேதவார்த்தை தெளிவாகச் சொல்லியிருக்க உலகம் முழுவதும் உள்ள ஓரினச்சேர்க்கையார்கள் தங்களது கேடான சிந்தைக்கு வேதத்தையும் கடவுளையும் துணைக்கு அழைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. டிம் குக் தான் ஆண்புணர்ச்சிக்காரனாக இருப்பது கடவுள் தந்த பரிசு என்று உளறுகிறார். நம் நாட்டில் கலாச்சாரம் என்ற கேடயம் தடுத்தாலும், அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று வசனத்தை மறந்துவிட்டு துணிகரமாய்ப்பாவம் செய்ய இங்குள்ள கிறிஸ்தவர்களும் தயங்குவதில்லை. தங்கள் கணவர்களின் இத்தீஞ்செயலால் பாதிக்கப்பட்டு கண்ணீராலும் அவமானத்தாலும் உழன்றுகொண்டிருக்கும் இரு கிறிஸ்தவ சகோதரிகளை எனக்குத் தெரியும்.
இன்னும் சில வருடங்களில் கற்பழிப்பு கூட மனித உரிமை என்னும் அவலமும் அதிர்ச்சியை உண்டாக்காமல் மனிதர்களாலும் அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் நாட்கள் வரக்கூடும். லஞ்சதைக்கூடச் சட்டபூர்வமாக்கலாம் என்று ஒரு பிரகஸ்பதி சிலனாட்களுக்கு முன் ஆலோசனை சொன்னதை அறிந்திருப்பீர்கள். பாவங்கள் என்று பட்டியலிடப் பட்டவைகளையெல்லாம் மனிதன் தன் வசதிக்காக மாற்றி புதிய லிஸ்ட்டை தயாரித்து உலகுக்கு வழங்கிக் கொண்டிருப்பது இறுதிகாலங்களில் நடக்க வேண்டியவையென்றாலும் இவைகளுக்காய், இவர்களுக்காய் பாரத்துடன் ஜெபிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
ரோமர் 1:28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
சகோ.பென்னி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum