ஆவியின் கனிகள் இருப்பவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்
Thu Dec 17, 2015 8:07 am
ஆலய ஆராதனையில் போதகர் இப்படியாக போதிக்கிறார் "ஆவியின் கனிகள் இருப்பவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்" வல்லமையான அபிஷேகம், வரங்கள், அந்நிய பாஷை இதெல்லாம் பிறகு தான், ஒரு மனிதன் ஆவியின் கனிகளான நற்குணங்களை வைராய்கியமாக பின்பற்றும்போது தான் இயேசு கிறிஸ்துவை பின்பற்ற கூடியவனாக் இருக்கிறான்,
வேதம் சொல்கிறது "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ஆக இவ்வார்த்தையின் படி நடப்போம் என்று முடிக்கிறார்.. எவ்வளவு உண்மை உள்ள சத்திய வார்த்தைகள், கிறிஸ்தவர்கள் என்றாலே அன்பானவர்கள் என்று புற ஜாதியினர் மத்தியில் ஒரு பொதுவான அபிப்ராயம் உண்டு தான் என்று சிந்திக்கும் அதே வேலை இன்னொரு காரியத்தையும் கவனிக்க நேர்ந்தது!!!
ஆலயத்திலே தேர்தல் வரபோகிறது என்பது தான் அது, இரண்டு முதல் பல அணிகளாக நிற்கிறார்கள், ஒருவரை பற்றி இன்னொருவர் குறை கூறுவதும் திட்டி தீர்ப்பதும், உலக அரசியலை போலவே இவர்களும் எதிர்கால திட்டங்கள் இது என்று நோட்டீஸ் கொடுகிறார்கள் , நாங்கள் ஆட்சிக்கு வந்தால்? ஆலயத்தில் அதை செய்வோம், இதை செய்வோம், என்று அடுக்கிகொண்டே போகிறார்கள்!!! இதை ஆவிக்குரிய தேர்தல் (அரசியல்) என்றும் சொன்னார்கள்!! அதிக வாஞ்சையோடே வேதாகமத்தில் ஆவிக்குரிய தேர்தல் பற்றி ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று தேடி ஒருவழியாக இறுதியாக எரேமியா தீர்க்க தரிசன புத்தகத்தில் 10ஆம் அதிகாரம் 15வது வசனத்தை எடுத்து பார்த்தால்??? அப்படி எந்த வார்த்தைகளும் இல்லை என்று தெரிந்தது!!!
பதவி ஆசை, அதிகார கர்வம், செல்வாக்கு, போன்ற உலக இச்சைகளை அழகு பார்க்கும் காலச்சாரம் இன்று தேவாலயங்களையும் விட்டு வைக்கவில்லை, ஊழியம் செய்ய உலகத்தில் எவ்வளவோ பகுதிகள் இருகின்றது வேதம் சொல்கின்றது "அறுவடையோ மிகுதி, ஆட்களோ குறைவு" என்று!!! இங்கோ நான்கு சுவற்றுக்குள் யார் பெரியவர்கள் என்ற யுத்தம் மட்டுமே நடக்கிறது, ஒரு நாள் இயேசு கிறிஸ்து சாட்டையை எடுப்பார் அன்று முடியும் இந்த ஆலய அரசியல் (தேர்தல்)...
- இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.யூதா-1:16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum