உண்மையான நட்பு
Sat Mar 30, 2013 9:11 pm
கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள்
சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து
கிடந்தான்.
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன்
எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான்
சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார்
கமேண்டர்.
நீ போவது என்றால் போ,
ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர்
சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி
கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி
அவனை தூக்கி கொண்டு வந்தான்.
கமேண்டர் அவனை பரிசோதித்து
பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ
அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும்
அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.
நான் போனது தான் சார்
சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது
எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது
என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய்
என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த
ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே
இல்லை என்றான்.
இதுதான் உண்மையான நட்பு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum