சர்க்கரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு..!
Mon Nov 16, 2015 10:01 pm
- சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ’மருத்துவ உணவியல் துறை’ பேராசிரியை குந்தலா ரவி தரும் ஆலோசனைகள் இங்கே..
* கம்பு, பார்லி, அரிசி, ஓட்ஸ், சோளம், அவல், மக்காச்சோளம், கேழ்வரகு, கோதுமை.. போன்ற தானியங்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
* பருப்பு வகைகளில்.. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, பட்டாணி, காராமணி.. போன்றவற்றை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.
* பாகற்காய், வெள்ளை முள்ளங்கி, தக்காளி, கொத்தவரங்காய், காராமணி, வெள்ளரிக்காய், அவரை, முருங்கை, கத்திரிக்காய், கோவைக்காய், வெண்பூசணி, முட்டைகோஸ், வாழைப்பூ, வாழைத் தண்டு, பீர்க்கங்காய், பரங்கிக்காய், சீமை கத்திரிக்காய், குடமிளகாய், நூல்கோல், பப்பாளிக்காய், வெண்டைக்காய்.. போன்றவற்றில் 5 சதவிதத்துக்கும் குறைவான மாவுச்சத்து இருப்பதால்.. தேவையான அளவுக்கு இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
* பச்சைப் பட்டாணி, பீட்ரூட், கேரட், சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, மரவள்ளி, சேனை, கருணைக்கிழங்கு.. போன்றவற்றில் 5 முதல் 10 சதவிகிதம் மாவுச்சத்து கலந்திருப்பதால்.. அளவோடு உட்கொள்ள வேண்டும்.
* பழங்களைப் பொறுத்தவரையில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் சாப்பிடவேண்டியது அவசியம். அதிலும் ஜூஸ் போட்டு குடிக்காமல், `கட்' செய்தோ அல்லது கடித்தோ சாப்பிடுவது மிக நல்லது.
பழங்களில்..
சாத்துக்குடி (1), கொய்யா (1), பப்பாளி (2 அல்லது 3 பீஸ்), நெல்லி (4 அல்லது 5), அன்னாசி (1 பீஸ்), பேரிக்காய் சிறியது, ஆப்பிள் சிறியது, திராட்சை 50 கிராம், நாவல்பழம் 10, மாதுளை சிறியது 1... என தினமும் ஏதேனும் ஒரு வகையை மட்டும் சாப்பிடுவது மிக அவசியம்.
* மாமிசத்தைப் பொறுத்தவரைக்கும்
ஆடு, மாடு போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நலம். மீன் மற்றும் கோழி சாப்பிட நினைப்பவர்கள் 75 கிராம் அளவுக்கு வாரத்தில் இரண்டு முறை சாப்பிடலாம். அதை ஒருபோதும் எண்ணெய் கலந்து வறுவலாகச் சாப்பிடுதல் கூடாது. குழம்பாகச் சாப்பிடலாம்.
முட்டை சாப்பிட நினைப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மீன், கோழி சாப்பிடும் அன்று முட்டை கூடாது.
* பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, வால்நட், பேரீச்சை... போன்றவற்றை வாரத்துக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை, வெல்லம், குளுக்கோஸ், தேன், குளிர்பானம், சாக்லேட், க்ரீம் கலந்த கேக் வகைகள், கரும்பு, சத்து பவுடர்கள்.. போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
#அவள்விகடன் #சர்க்கரைநோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum