திடீரென டயர் வெடித்தால்..
Mon Nov 02, 2015 9:11 pm
திடீரென டயர் வெடித்தால்..
சார்லஸ்
சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் மிகவும் வேகமாகப் போய்க்கொண்டு இருந்த ஸ்கார்பியோ கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப் பக்கம் வந்துகொண்டிருந்த 2 சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் பலியானதுடன், 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடக்கக் காரணமாக இருந்தது டயர்தான். கார் வேகமாகப் போய்க் கொண்டு இருந்தபோது, திடீரென டயர் வெடித்ததுதான் விபத்துக்குக் காரணம்! இந்த விபத்து மட்டுமல்ல... நெடுஞ்சாலையில் நடக்கும் பல மோசமான விபத்துகளுக்கும் டயர் வெடிப்புதான் முக்கியக் காரணம்!
பொதுவாக, குறைவான வேகத்தில் செல்பவர்கள் டயர் வெடிப்புப் பிரச்னை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போது திடீரென
டயர் வெடித்தால், நிலைமையைச் சமாளிப்பதற்கு எப்போதும் தயாராகவே இருங்கள். காரை கன்ட்ரோல் செய்வதில்தான் முழு திறமையும் இருக்கிறது என்பதால், எப்போதுமே அலர்ட்டாக இருக்க வேண்டும்!
ஸ்டீயரிங் கன்ட்ரோல்
டயர் வெடித்தால்... உடனே ஸ்டீயரிங்கில் இரண்டு கைகளையும் வைத்து க்ரிப்பாகப் பிடித்துக்கொள்ளுங்கள். உடனடியாக ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் குறையுங்கள். எந்தப் பக்கம் காரை நிறுத்த விரும்புகிறீர்களோ, அந்தப் பக்கம் இண்டிகேட்டரைப் போட்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.
பிரேக்
டயர் வெடித்தவுடன் எப்போதுமே உடனடியாக முழு பிரேக்கையும் அழுத்தக் கூடாது. காரைத் திருப்பும்போதே பிரேக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து காரின் வேகத்தைக் குறையுங்கள்.
எங்கே நிறுத்துவது?
சாலையின் ஓரத்துக்கு வந்து காரை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது. நடு சாலையில் நிறுத்திவிட்டு எச்சரிக்கை விளக்குகளை ஒளிரச் செய்வதை, பல நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் கவனிக்காமல் போகும் வாய்ப்பு உண்டு.
சார்லஸ்
சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் மிகவும் வேகமாகப் போய்க்கொண்டு இருந்த ஸ்கார்பியோ கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப் பக்கம் வந்துகொண்டிருந்த 2 சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் பலியானதுடன், 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடக்கக் காரணமாக இருந்தது டயர்தான். கார் வேகமாகப் போய்க் கொண்டு இருந்தபோது, திடீரென டயர் வெடித்ததுதான் விபத்துக்குக் காரணம்! இந்த விபத்து மட்டுமல்ல... நெடுஞ்சாலையில் நடக்கும் பல மோசமான விபத்துகளுக்கும் டயர் வெடிப்புதான் முக்கியக் காரணம்!
டயர் வெடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, குறைவான வேகத்தில் செல்பவர்கள் டயர் வெடிப்புப் பிரச்னை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போது திடீரென
ஸ்டீயரிங் கன்ட்ரோல்
டயர் வெடித்தால்... உடனே ஸ்டீயரிங்கில் இரண்டு கைகளையும் வைத்து க்ரிப்பாகப் பிடித்துக்கொள்ளுங்கள். உடனடியாக ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் குறையுங்கள். எந்தப் பக்கம் காரை நிறுத்த விரும்புகிறீர்களோ, அந்தப் பக்கம் இண்டிகேட்டரைப் போட்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.
பிரேக்
டயர் வெடித்தவுடன் எப்போதுமே உடனடியாக முழு பிரேக்கையும் அழுத்தக் கூடாது. காரைத் திருப்பும்போதே பிரேக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து காரின் வேகத்தைக் குறையுங்கள்.
எங்கே நிறுத்துவது?
சாலையின் ஓரத்துக்கு வந்து காரை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது. நடு சாலையில் நிறுத்திவிட்டு எச்சரிக்கை விளக்குகளை ஒளிரச் செய்வதை, பல நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் கவனிக்காமல் போகும் வாய்ப்பு உண்டு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum