கணிணியில் - ஐகான்கள் திடீரென மறைந்தால்...
Mon Nov 23, 2015 3:33 pm
உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்த ஐகான்கள் மறைந்து போவதற்கு ஒன்று explorer.exe பைலில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அல்லது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். டெஸ்க்டாப்பில் இருந்து மறைந்துபோன ஐகான்களை மீண்டும் டெஸ்க்டாப்பிற்கு கொண்டுவர கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பார்க்கவும்.
show desktop Icons
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தால் டெஸ்க்டாப்பின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து arrange Icons by ஆப்ஷனை கிளிக் செய்து அதன் பின்னர் show des-ktop Icons–ஐ செக் செய்யவும். விண்டோஸ் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்சன் ஆபரேட்டிங் சிஸ்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் டெஸ்க்டாப் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து ‘வியூ’ ஆப்ஷனை கிளிக் செய்து, அதன் பின்னர் Show desktop icons செக் செய்யவும்.
Restart Explorer.exe
Ctrl+Alt+Del என்ற குறுக்கு விசைகளை சொடுக்கி Task Manager விண்டோவை திறந்து கொள்ளவும். நீங்கள் விண்டோஸ் 7 மற்றும் அதற்கு அடுத்தபடியான விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தால் விண்டோவின் கீழ்ப்புறத்தில் தோன்றும் Start Task manager லிங்கை கிளிக் செய்யவும்.
பின்னர் Task Manager விண்டோவில் உள்ள File மெனுவை கிளிக் செய்து அதிலுள்ள New Task (Run...) ஆப்ஷனை கிளிக் செய்யவும். Create New Task என்ற தலைப்புடன் தோன்றும் சிறிய விண்டோவில் Open: என்பதற்கு அருகில் உள்ள சிறிய கட்டத்தில் Explorer.exe என்று தட்டச்சு செய்து ஓ.கே. பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது Explorer பிராசஸ் வேலை தொடங்கி டெஸ்க்டாப் ஐகான்கள், டாஸ்க்பார் மற்றும் Start பட்டன் ஆகியன முகப்புத் திரையில் தோன்றும்.
மேற்கூறப்பட்ட இரண்டு வழிமுறைகளை பயன்படுத்தியும் டெஸ்க்டாப்பில், ஐகான்கள் தோன்றவில்லை என்றால் கணினியில் உள்ள சில கோப்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். குறிப்பிட்ட பைல்கள் ‘ரிப்பேர்’ செய்யப்படும் வரை டெஸ்க்டாப் ஐகான்கள் தோன்றாது. குறிப்பாக Run System File Checker மற்றும் Icon Cache கோப்புகளில் ஏற்பட்ட பழுதுகள் ஐகான்களை மறையச் செய்திருக்கலாம். இந்த பழுதுகளை சரி செய்வதன் மூலம் ஐகான்களை திரும்ப கொண்டு வர முடியும். இன்டர்நெட் வழிகாட்டுதல் படியோ அல்லது அருகில் உள்ள சர்வீஸ் மையங்களில் கொடுத்தோ இதை சரி செய்யலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum