உங்கள் கணிணியில் சேவையகம்
Sun Aug 18, 2013 9:41 am
கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும்.
இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் பயன்படுத்தும் கணினியில் (உதாரணமாக: விண்டோஸ் 7) சேவையக மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம், ஆனால் இவற்றின் பயன்பாடு இணைய வடிவமைப்பு உருவாக்கத்தில் சோதனை செய்து கொள்ள அமைகின்றது. இம்மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு சாதரண கணினியை சேவையகமாக மாற்ற முடியாது, அப்படிப் பயன்படுத்தினாலும் அக்கணினி சுமையைத் தாங்காது என்பது அறியவேண்டியது ஒன்று.
மிகவும் பிரசித்தி பெற்ற விண்டோசுக்கான சேவையக மென்பொருள் எக்சாம்ப் (XAMPP) ஆகும். இது இலவசமாகக் கிடைக்கின்றது. இதில் இரண்டு முக்கிய சேவையகம் உள்ளது:
php நிரலுக்குரிய Apache சேவையகம் மற்றும் MySql தரவுத்தளத்துக்குரிய சேவையகம்.
XAMPP
நன்றி: பல்கலைக்கழகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum