பஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா?
Sun Mar 29, 2015 6:34 am
என்னதான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்தாலும், வாகன ஓட்டிகளுக்குப் பெரிய தலைவலி பஞ்சர் பிரச்னைதான். ட்யூப்லெஸ் டயர்களில் பெரிய ப்ளஸ் - பஞ்சர் ஆனாலும், 100 கி.மீ வரை காற்றடித்துவிட்டு ஓட்டலாம். அதையும் மீறி சில டயர்கள் வெடித்துவிடும் அபாயமும் நடக்கிறது.
பஞ்சரே ஆகாத, அப்படியே ஆனாலும் காற்றே இறங்காத டயர்கள் வந்தால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு டெக்னாலஜி, ரைனோ டயர் என்னும் பெயரில் வந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த ரைனோ டயர்கள் ரொம்ப பிரபலம். ரைனோப்ளெக்ஸ் எனப்படும் பாலிமர் சேர்மம் கொண்ட ஜெல், டயர்களின் உள்பக்கம் அப்ளை செய்யப்படுகிறது.
இது கூர்மையான ஆணி போன்ற பொருட்கள் இறங்கினால் ஏற்படும் ஓட்டைகளை, கிழிசல்களை உடனேயே தானாகவே அடைத்துவிடும் தன்மை கொண்டவை.
248 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இந்த ஜெல் ஸ்ப்ரே செய்யப்படுவதால், வாகனம் ஓட ஓட, இது டயரின் ஒரு அங்கமாகவே மாறி, உள்ளே இருக்கும் காற்று வெளியே போகாதவண்ணம் காக்கிறது.
- தமிழ்

உலகமெங்கும் காடு, மலை, பாலைவனங்களில் நடக்கும் கொடூர ரேஸான டக்கார் ரேலியில் கலந்துகொள் பவர்களுக்குப் பெரிதும் உதவுவது இந்த ரைனோ டயர்கள்தான். மேலும் பைக், கார், ட்ரக் போன்ற எந்த வாக னங்களுக்கும் எப்படிப்பட்ட டயருக்கும் இந்த ரைனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
பழைய டயர்களிலும் இதைப் பயன்படுத்தினாலும், ஹேண்ட்லிங், மைலேஜ், ரோடு கிரிப் போன்ற எந்தப் பிரச்னைகளுக்கும் பங்கம் வராது என்கிறார்கள் ரைனோ தொழில்நுட்ப வல்லுநர்கள். ஹோண்டா, யமஹா போன்ற பைக்குளில் இப்போது ரைனோ டயர்கள்தான் ஃபயர் கிளப்புகின்றன.
- தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum