தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யூதர்களை போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க இயலுமா??? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யூதர்களை போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க இயலுமா??? Empty யூதர்களை போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க இயலுமா???

Sat Sep 05, 2015 11:27 pm
ஏன் யூதர்கள் உலகில் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள்-விஞ்ஞானப்பூர்வ ஆய்வு அறிக்கை டாக்டர் ஸ்டீஃபன் கார் லியோன்(Dr.Stephen Carr Leon) அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம்.
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க இயலாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரீக உடைகள், உணவுப்பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத்துறை(ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.
நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவமனைகளில் உள் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதிக புத்திசாலிகளாக(திறமைசாலிகளாக) இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.
ஏன், கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டித்துக்கொள்ள முடியுமா? இந்த கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில், அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு,கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
தனக்கு பிறக்கபோகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து செய்துகொள்கிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக்கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச்செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்கு போட உதவி செய்வேன். அப்போது அவளிடம் ” இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” எனக் கேட்பேன்.”ஆமாம் கருவிலிருக்கும் போதே ப்யிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது; பாலில் பாதாம் பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு த்லை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம் பருப்பும் மற்ற கொட்டை வகைகளும் (nuts) , சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (Salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.
மீன், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண், மீன் எண்ணெய் உட்கொள்வது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதை பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை, மற்ற இறைச்சிகளையும் மீன் இறைச்சிகளையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்.
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட் சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித்தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
சிகெரெட்டில் இருக்கும் நிகோடின் நமது மூளையில் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக் கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம் பருப்பு, மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்கிறார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள்-ஹீப்ரு, அராபிக் மற்றும் ஆங்கிலம் -அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்.
இசைக் கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ(Intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் த்றன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைக்கிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள் (Projects) புதிதாக பொருட்கள் செய்வது(Product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில் நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப்படுத்தி காட்டவேண்டும். 10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால்தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற லிவிஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business fashion) ஆசிரியர்களால் உருவாக்கபட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறார்களா? எப்போதும் தலையை மேலும் கீழும் அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படி செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.
இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள், சுஷி உணவை (புதிதாக பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல் என்று சொல்லலாமா?
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்கு பலவகையில் உதவுகிறது, யாருக்காவது பயன் தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ், கோகோ கோலா, DKNY, ஆரக்கிள், லிவிஸ், டன்கின்டோணட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்கள்து ஆதரவில் நடைபெறுகின்றன.
சற்று சிந்தித்து பாருங்கள் என்னுடைய ஆய்வரிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.
நம்மால் யூதர்களை போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க இயலுமா???

Written By : DR.STEPHEN CAAR LEON
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum