இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்
Sat Apr 06, 2013 12:26 pm
பிரிட்டன்
பிரதமர் டேவிட் கேமரன் பொது ரயில் சேவையான லன்டன் மெட்ரோவில்(டியூபில்)
அமர இடம் இல்லாததால் நின்று கொண்டு பயணம் செய்தார்.
வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான், நம்ம ஊர்ல முதல்வர் கூட போன
போலிஸ்காரங்களை ஷூவை கழற்றிட்டு ஐசியூ உள்ளே போன்னு சொன்னதுக்கு டாக்டரை
தூக்கி உள்ள வைச்சவங்களாச்சே, இங்கே இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
#பிடிச்சிருந்தா ஒரு லைக்கை போடுங்க
நன்றி: முகநூல்
Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்
Mon Apr 29, 2013 9:15 pm
வெளிநாடுகள்
பலவற்றிலும், வனங்களுக்கு ஊடாக செல்லும் நெடுஞ்சாலைகள் (high ways) ,
காரணமாக வனவிலங்குகளுக்கு எந்தபாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில்
அக்கறையாக இருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு
விலங்குகள் இறந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே பிரத்யேக பாலங்களை
(Wildlife Overpass) அமைத்துள்ளனர்.
கீழே உள்ள படம் நெதர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம். (Ecoduct De Woeste Hoeve over the highway A50, Netherlands.)
Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்
Fri Jul 19, 2013 9:38 am
உலகின் மிகப்பெரிய வல்லரசின் அதிபர் தன்னுடைய அடையாள அட்டை பெறுகின்ற காட்சி இது.ஊழியர்கள் அதிபர் வந்து விட்டாரே என்று அலறித் துடித்து உபசரிக்கவில்லை,எழுந்து நிற்கவில்லை,இயல்பாக பணிபுரிகின்றனர்.அவர்களிடம் அதிபரும் சிரித்தபடி உரையாடி மகிழ்கிறார்.
ஆனால் இங்கேயோ தலைவன் ஒண்ணுக்கு அடிக்க போனால் கூட பேனர்,மேள,தாள வரவேற்பு கொடுக்கத் துடிக்கும் தொண்டர்கள்.என்றைக்கு ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரும் இயல்பாக,சகஜமாக உறவாடுகின்ற ஒரு நிலை இங்கே வருகிறதோ அன்றைக்குத்தான் இந்த நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்பட முடியும்,அது வரைக்கும் இது ஒரு பிரம்மாண்டமான நீர்க்குமிழிதாம்,எந்நேரத்திலும் உடைந்து போகலாம்.
யுவான் சுவாங்
Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்
Mon Jul 29, 2013 8:23 am
தமிழ்நாட்டு மக்களே இதுதான் கேரளாவுக்கும் , தமிழ்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் -
நீங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்பொழுது...??
Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்
Mon Jun 30, 2014 8:23 pm
இவர்தான் உருகுவே நாட்டின் அதிபர் Jose Mujica,
அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற தனது
முறைக்காக வரிசையில் காத்திருக்கிறார்..
இவர் வசிக்கும் வீடு, தினசரி வாழ்க்கை போன்றவற்றை பார்க்கும்போது தலைசுற்றுகிறது..
கக்கன், காமராஜ் வகையறாக்கள் உலகெங்கும் உண்டுபோல
இவரைப்பற்றி பிபிசியின் செய்தித்தொகுப்புhttp://www.wimp.com/poorestpresident/
- எழுமலை
அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற தனது
முறைக்காக வரிசையில் காத்திருக்கிறார்..
இவர் வசிக்கும் வீடு, தினசரி வாழ்க்கை போன்றவற்றை பார்க்கும்போது தலைசுற்றுகிறது..
கக்கன், காமராஜ் வகையறாக்கள் உலகெங்கும் உண்டுபோல
இவரைப்பற்றி பிபிசியின் செய்தித்தொகுப்புhttp://www.wimp.com/poorestpresident/
- எழுமலை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum