இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா?
Thu Aug 15, 2013 9:48 am
அகத்தியர் பாடல் 5: இதினாலெல்லாம் பரலோகம் போக இயலுமா?
கருத்துரை :
பக்தர்கள் கூட்டமாக ஒன்று கூடி பரப்பிரம்மாகிய மெய் கடவுளையே வணங்குவதாக நம்பிக் கொண்டு, பாவங்கள் தொலைய தான தர்மங்கள் போன்ற நன்மைகளைச் செய்து இலிங்கத்தை பூசை செய்து திரிவது சுணை கெட்ட மாட்டின் நிலையாகும்.எரி நரகத்திற்கென்று நியமிக்கப்பட்டு இருக்கும் சாத்தான் செய்யும் இடர்கள் இவைகள் என்று எண்ணாமல் உடம்பெல்லாம் சாம்பல் பூசி, சிவ சிவ என்று எங்கும் கூறிக்கொண்டு அலைந்து திரிந்து,பொங்கும் அலைகளையுடைய கடலில் மூழ்கி தீட்சை பெற்று விட்டால் புகழ் மலையாம் கயிலாயம் சென்றடைய இயலுமா? இயலாது என்பதாம்.
விளக்கவுரை: பூஜை, தான தர்மம் போக்காது பாவத்தை
பக்தர்கள் ஒன்று கூடி பல பெயர்களில் கூட்டமாக பிரப்பிரம்மமாகிய மெய்ப்பொருளையே போற்றி வழிபடுவதாக எண்ணிக்கொண்டு, சில நல்ல ஆன்மீக விஷயங்களை சொல்லுகின்ற, சில நல்ல காரியங்களையும் சில சமுதாயப் பணிகளையும் செய்கின்ற மனிதரையெல்லாம் தெய்வமாகவும், தெய்வப்பிறவிகளாகவும், அவதார புருஷர்களாகவும் ஆக்கி அவர்களையும்,மனிதர்கள் தன் கையினால் உண்டாக்கிய சிலைகளையும், காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட படங்களையும் பூஜிப்பதாலேயோ,செய்த பாவங்கள் போக வேண்டுமென்பதற்காக தான தர்மங்கள், அன்னதானம் முதலிய நன்மைகளை செய்வதாலேயோ முக்தி அடைய இயலாது.
லிங்கத்திற்கு செய்யும் பூசை, சாம்பல் பூசும் பக்தி, சிவ சிவ என்று கூறிக் கொண்டு திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து கடலில் மூழ்கி தீட்சை பெறல், இவற்றால் எல்லாம் கைலாயம்(பரலோகம்) சென்று விட முடியாது. இதெல்லாம் எரிநரகத்திற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் சாத்தான் செய்யும் இடர்கள். அவன் தந்திரமாய் மக்களை ஏமாற்றி இது போன்ற ஆசாரங்களையும், நியமங்களையும், சம்பிரதாயங்களையும் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி அவர்களை திசை திருப்பியுள்ளான்.
நன்றி: இயேசு கீக்கிரம்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum