அவர் நியாயதிபதியாய் வரும்போது
Fri Jul 17, 2015 10:44 pm
திருடன் ஒருவன் இருந்தான். பல முறை திருடி மாட்டிக் கொண்டு சிறை சென்று வருவான். ஒவ்வொரு முறையும் அவன் சிக்கிக் கொள்ளும் போதும் அவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரும் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் அவனுக்காக வாதாட மறுத்து விடுவார். இருந்தாலும் அவன் அவரது கையை காலைப் பிடித்துக் கெஞ்சுவான்.
அவரும் மனம் இரங்கி,
" இனி இந்த மாதிரி செய்தால் உனக்காக வாதாட மாட்டேன் " என்று எச்சரிக்கை செய்து விட்டு அவனுக்காக வாதாடி அவனது தண்டனையைக் குறைத்து விடுவார். இது பலமுறை தொடர்ந்தது.
" இனி இந்த மாதிரி செய்தால் உனக்காக வாதாட மாட்டேன் " என்று எச்சரிக்கை செய்து விட்டு அவனுக்காக வாதாடி அவனது தண்டனையைக் குறைத்து விடுவார். இது பலமுறை தொடர்ந்தது.
வருடங்கள் ஓடின. திருடன் எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் ஒரு பெரிய வழக்கில் சிக்கிக் கொண்டான். அது கொஞ்சம் பெரிய குற்றம். இப்போதும் அவனது வழக்கறிஞர் திறமையாக வாதாடி அவனது தண்டனையைக் குறைத்து விடுவார் என்று நம்பினான்.
ஆனால் விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் இப்போது வழக்கறிஞர் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்று நீதிபதி ஆகிவிட்டார் என்பது. அவனுக்கு மிகுந்த சந்தோஷம். தனக்காக வாதாடியவரே இப்போது நீதிபதி . அவர் நினைத்தால் தன் பேரிலுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யக்கூட முடியும். இம்முறை அவன் சும்மா பேருக்கு ஒரு சாதாரண வக்கீலை நியமித்துக் கொண்ட நம்பிக்கையோடு குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றான். நீதிபதி அவன் முகத்தை ஏறிட்டார்.
" ஆஹா! நமக்கு விடுதலைதான்". அவனது மனம் குதூகலமாய்த் துள்ளியது. நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கவனித்துக் கேட்டார். பிறகு அவன் இதுவரை அனுபவித்திராத ஒரு பெரிய தண்டனையை வழங்கினார். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. துடித்துப் போனான்.
" ஐயா! எப்போதும் எனக்காகப் பரிந்து பேசும் நீங்களே எனக்கு இப்படி ஒரு தண்டனையை விதித்து விட்டீர்களே! " என்று அவரது காலில் விழுந்து கதறினான். நீதிபதி கடுமையாகச் சொன்னார்,
" மூடனே! நான் வழக்குரைஞராக இருக்கும்வரை உன்னை எவ்வளவோ எச்சரித்தேன். தொடர்ந்து உனக்கு சாதகமாக வாதாடி வந்தேன். இப்போது நான் நீதிபதி. உன்னுடைய எல்லாக் குற்றங்களுமே நான் அறிந்திருக்கிறேன். நீ தண்டனையிலிருந்து தப்பவே முடியாது . இந்தக் கடுமையான தண்டனையை அனுபவித்தே
ஆக வேண்டும் " .
செல்லமே! ஏசப்பா நமக்காகப் பரிந்து பேசுகிறவர்தான். ஆனாலும் அவர் நியாயதிபதியாய் வரும்போது அவனவனுக்கான பலன் அவருடனேயே கூட வரும். நல்ல பலனானாலும், கெட்ட பலனானாலும் அநுபவித்தே தீரணும். தப்பவே முடியாது.
எச்சரிக்கையாய் இருக்கணும், புரியுதா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum